சீரியம்(III) அசிட்டேட்டு
சீரியம் அசிட்டேட்டு (Cerium acetate) என்பது Ce(CH3COO)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் தூளாகக் காணப்படும் இச்சேர்மம் நீரில் கரையும். 1.5 நீரேற்றானது 133 பாகை செல்சியசு வெப்பநிலையில் நீர் மூலக்கூற்றை இழந்து படிக உருவமற்ற நீரிலியாக மாற்றமடையும். 212 பாகை செல்சியசு வெப்பநிலையில் இந்நிலையும் மாற்றமடைந்து படிகநிலைக்கு மாறும். மேலும், 286 பாகை செல்சியசு வெப்பநிலையில் மீண்டும் ஒரு முறை நிலையில் மாற்றமடைகிறது. தயாரிப்புசீரியம்(III) கார்பனேட்டு மற்றும் 50% நீர்ம அசிட்டிக் அமிலம் ஆகியன் வினை புரிந்து சீரியம் அசிட்டேட்டு உருவாகிறது.
பண்புகள்நீரிலி நிலை சீரியம் அசிட்டேட்டு தண்ணீரிலும் எத்தனாலிலும் கரையும். ஆனால் நீரேற்று வடிவம் எத்தனாலில் கரையாது. பிரிடின் எளிதாக கரைகின்ற இச்சேர்மம் அசிட்டோனில் கரையாது.[1] 310 பாகை செல்சியசு வெப்பநிலையில் வெப்பச் சிதைவுக்கு உட்பட்டு கார சீரியம்(III) அசிட்டேட்டு உருவாகிறது. இது மேலும் அதிகமான வெப்பநிலையில் மேலும் சிதைவடைந்து Ce2O2CO3 சேர்மமாக மாற்றமடைகிறது. மேலும் அதிக வெப்பநிலையில் CeO2 மற்றும் CO போன்றவை உருவாகின்றன.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia