சூரியா சென்
சூரியா சென் (Surya Sen) (22 மார்ச் 1894 - 12 சனவரி 1934) பிரித்தானிய இந்தியாவின் வங்காளத்தில் உள்ள சிட்டகாங் நகரத்தில் பிறந்த இந்திய விடுதலை இயக்க வீரர் ஆவார். பிரித்தானிய இந்திய அரசுக்கு எதிராக, 1930-இல் சிட்டகாங் ஆயுத கிடங்கை சூறையாடும் புரட்சியில் ஈடுபட்டதன் மூலம் அறியப்பட்டவர். சிட்டகாங் நகரத்தில் சூரியா சென் ஆசிரியராக பணியாற்றியவர். வங்காள மக்கள் சூரியா சென்னை மாஸ்டர் என்று மரியாதையுடன் அழைத்தனர். முர்சிதாபாத் மாவட்டத்தின் தலைமையிட நகரமான பெஹரம்பூரில் 1916-இல் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே இந்திய விடுதலை இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டவர்.[1] இளமை வாழ்க்கைசூரியகுமார் சென் 22 மார்ச் 1894-இல் சிட்டகாங் பகுதியில் உள்ள நவபரா கிராமத்தில் பிறந்தவர்.[2] இவரது தந்தை இரமணிரஞ்சன் சென் பள்ளிக்கூட ஆசிரியர் ஆவார். சூரியகுமார் சென் கல்லூரி படிப்பின் போதே இளைஞர்களின் புரட்சிகர அமைப்பான அனுசீலன் சமிதியில் சேர்ந்தார். கல்லூரி படிப்பு முடிந்த பின் சிட்டகாங் மாவட்டத்தில் உள்ள நந்தன்கனான் பகுதியில் அமைந்த தேசியப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். சிட்டகாங் ஆயுத கிடங்கு சூறையாடல்சூரியா சென் தனது புரட்சிகர குழுவினருடன் 18 ஏப்ரல் 1930 அன்று சிட்டகாங் நகரத்தில் உள்ள காவல்துறையினரின் ஆயுத கிடங்கை சூறையாட திட்டமிட்டார்.[3] இத்திட்டத்தை நிறைவேற்ற இவரது தலைமையிலான குழு ஒன்று முதலில் தொலைபேசி, தந்தி மற்றும் தொடருந்து வசதிகளை செயலிழக்க செய்தித் தொடர்பு அமைப்புகளை முற்றிலும் அழித்து விட்டனர். இதனால் சிட்டகாங் நகரம் நாட்டின் பிற பகுதிகளுடன் செய்தித் தொடர்பு வசதிகளை இழந்தது.[3] சூரியா சென் குழுவினர் ஆயுத கிடங்கில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிய பின்னர் ஆயுத கிடங்கை சூறையாடினர். பிரித்தானியக் காவல் துறையினருக்கும் புரட்சிகர குழுவினருக்கும் இடையே நடந்த மோதலில் பன்னிரண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் இறந்தனர், பலர் கைது செய்யப்பட்டனர், சூரியா சென்னும் மற்றும் சிலரும் அங்கிருந்து ஓடி மறைந்து விட்டனர்.[3] சூரியா சென்னின் கைதும் மரணமும்சூரியா சென்னை தூக்கிலிட்ட தூக்கு மேடை, சிட்டகாங், வங்காளதேச அரசு அதனை வரலாற்று நினைவிடமாக அறிவித்துள்ளது. சூரியா சென் பிரித்தானிய காவல்துறையிடம் அகப்படாது தலைமறைவாக இருந்து கொண்டே இந்திய விடுதலை இயக்கத்திற்குப் புத்துணர்வு ஊட்டிக்கொண்டே இருந்தார். ஒரு முறை அவரது உறவினரான நேத்திரா சென் என்பவரின் வீட்டில் தலைமறைவாக இருந்த போது, பிப்ரவரி 1933 இல் பிரித்தானியக் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். சூரியா சென்னைத் தூக்கில் இடுவதற்கு முன்பாக, அவரது ஒவ்வொரு பற்களையும் குறடால் பிடுங்கி எறிந்தனர். பின்னர் கால்கள் மற்றும் கைகளில் உள்ள அனைத்து மூட்டெலும்புகளை சுத்தியால் உடைத்தனர். உணர்விழந்த நிலையில் இருந்த சூரியா சென்னை தூக்கு மேடையில் ஏற்றினர். அவரது இறப்பிற்குப் பின் சடலத்தை தடிமனான இரும்புப் பெட்டியில் வைத்து, பிரித்தானிய காவல் துறையினர், வங்காள விரிகுடாவில் எறிந்தனர்.[4] பிரபல கலாச்சாரத்தில் கருத்தோவியம்இந்திய திரைப்பட இயக்குநர் அசுதேஷ் கவுரிகர் 2010-ஆம் ஆண்டில் கேலின் ஹம் ஜி ஜான் சே எனும் (Khelein Hum Jee Jaan Sey) திரைப்படத்தில் சூரியா சென்னின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். இத்திரைப்படத்தில் அபிஷேக் பச்சன் சூரியா சென்னாக நடித்துள்ளார். சூரியா சென் நடத்திய சிட்டகாங் ஆயுதக் கிடங்கி சூறையாடல் நிகழ்வை விளக்கும் வகையில், 2012-ஆம் ஆண்டில் தேவவிரத பெயின் என்பவர் இயக்கிய சிட்டகாங் எனும் திரைப்படத்தில் மனோஜ் வாஜ்பாய் என்ற திரைப்பட நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia