சென்னை மதுரை துரந்தோ அதிவேக விரைவுத் தொடருந்து
வண்டி எண் 22205/22206 கொண்ட சென்னை மதுரை துரந்தோ தொடருந்து என்பது, முற்றிலும் குளிரூட்டப்பட்ட இடைநில்லா அதிவேக தொடருந்தாகும். இந்திய இரயில்வே துறையினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வண்டி, தமிழகத்தின் தலைநகரான சென்னையிலருந்து தென் தமிழகத்தின் முக்கிய மாநகரான மதுரைக்கு இயக்கப்படுகிறது. இடைநில்லா தொடருந்து என்பதால், புறப்படும் இடத்தையும் சேரும் இடத்தையும் தவிர வேறு எங்கும் நிற்காது. தொழில்நுட்ப ரீதியாக சேலத்தில் மட்டும் நின்று செல்லும். இந்தத் தொடருந்து, தென்னக இரயில்வே துறையினால் பராமரிக்கப்பட்டு வருகிறது. தொடருந்து பெட்டிகளின் தொகுப்புமற்ற துரந்தோ தொடருந்துகளைப் போலவே, இவ்வண்டியும் முற்றிலுமாக குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்டது. இத்தொடருந்தில்...
வண்டி எண் 22205 / சென்னை - மதுரை துரந்தோ தொடருந்துs இணைக்கப்பட்டுள்ள பெட்டிகளின் எண்ணிக்கை: 15
வண்டி எண் 22206 / மதுரை - சென்னை துரந்தோ தொடருந்து இணைக்கப்பட்டுள்ள பெட்டிகளின் எண்ணிக்கை: 15
கால அட்டவணை22205 - சென்னை சென்ட்ரலிலிருந்து மதுரைக்கு (திங்கள் & புதன்)[1]
22206 - மதுரையிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு (செவ்வாய் & வியாழன்)[2]
வழித்தடம்
நோக்கமும் முக்கியத்துவம்தமிழகத்தில், பொருளாதார, கலாச்சார மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளின் அடிப்படையில் முக்கிய மாநகரங்களாக விளங்குவது சென்னை மற்றும் மதுரை. மதுரை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் இருந்து மாநில தலைநகரான சென்னைக்கு வருவேரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொணடே வருகிறது. அப்படி வருவோரில் நான்கில் மூன்று சதவிகிதத்தினர், தொடருந்து போக்குவரத்தையே சார்ந்திருக்கின்றனர். அதனால், இவ்வழித்தடத்தில் மீளமுடியாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பாண்டியன், நெல்லை போன்ற அதிவிரைவு தொடருந்துகளில் பயணச்சீட்டு பெறுவதென்பது ஒரு இமாலய சாதனையாகிவிட்டது. அதன் காரணமாக, இவ்வழித்தடத்தில் புதிதாக தொடருந்துகளை அறிமுகப்படுத்த வேண்டிய சூழலில் தள்ளப்பட்ட இரயில்வே துறை, தென் தமிழகத்தில் முதன் முதலாக முற்றிலும் குளிர்சாதனப் பெட்டியால் ஒருங்கிணைக்கப்பட்ட துரந்தோ அதிவேக விரைவு தொடருந்தை அறிமுகப்படுத்தியது. இவ்வழித்தடத்தில், வழக்கமான தொடருந்துகளை விட, சிறந்த மற்றும் மிகவும் ஆடம்பரமான வண்டி இது ஒன்றே. மற்ற தொடருந்துகளை ஒப்பிடுகையில், இந்த வண்டி, பயணியரின் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. காட்சியகம்
References
|
Portal di Ensiklopedia Dunia