செருக் தோக்குன்
செருக் தோக்குன் (ஆங்கிலம்: Cherok Tok Kun; (மலாய் Cherok Tok Kun; சீனம்: 直落卓坤; ஜாவி: چيروق توء كون) என்பது மலேசியா, பினாங்கு, மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் அமைந்துள்ள சிறு நகரம். இந்த நகரம் கூலிம் நகருக்குச் செல்லும் வழியில் புக்கிட் மெர்தாஜாம் நகருக்கு அருகில் உள்ளது. இங்குதான் 1845-ஆம் ஆண்டில் செரோக் தோக்குன் கல்வெட்டு நினைவுச் சின்னம் (Cherok Tok Kun Inscription) கண்டுபிடிக்கப்பட்டது.[1] பல்லவம்; தமிழ்; சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்ட கி.பி. 600-ஆம் ஆண்டுக் காலத்துக் கருங்கல் கல்வெட்டு. ரமணிபரன் எனும் ரமவுனிபா பல்லவ மன்னர் ஆட்சி செய்ததை அந்தக் கல்வெட்டு நினைவூட்டுகிறது. [2] பொதுஇங்குள்ள புனித அன்னம்மாள் தேவாலயம் உலக அளவில் புகழ்பெற்றது. ஆண்டு தோறும் பெரிய அளவில் நோவெனா (Novena) திருவிழா நடைபெறும். மலேசியாவின் பல பாகங்களில் இருந்தும்; வெளிநாடுகளில் இருந்தும் கிறிஸ்துவ மக்கள் இங்கு ஒன்றுகூடி பிரார்த்தனைகள் செய்வார்கள்.[3] வரலாறுபல நூற்றாண்டுகளுக்கு முன்னர், இந்து - பௌத்த சமயங்கள் கலந்த பூஜாங் பள்ளத்தாக்கு நாகரிகத்தின் ஒரு பகுதியாக புக்கிட் மெர்தாஜாம் பிரசித்தி பெற்று விளங்கி உள்ளது. இங்குதான் 1845-ஆம் ஆண்டில் செரோக் தெக்குன் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.[4] அந்தக் கல்வெட்டை ஒரு நினைவுச் சின்னமாகப் போற்றிப் பாதுகாத்து வருகிறார்கள். இப்போது கெடா என்று அழைக்கப்படும் கடாரத்தை, பூஜாங் வெளி நாகரிகம், கி.பி 6-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்து உள்ளது. செருக் தோக்குன் கல்வெட்டுஅந்தப் புனித அன்னம்மாள் தேவாலயத்தின் வளாகத்திற்குள் மேலும் ஒரு வரலாற்று நினைவுச் சின்னம். அதன் பெயர் செரோக் தோக்குன் கல்வெட்டு நினைவுச் சின்னம் (Cherok Tokun Relics). 1845-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.[5] செரோக் தோக்குன் என்பது புனித அன்னம்மாள் தேவாலயம் அமைந்து இருக்கும் இடத்தின் பெயர். அந்தத் தேவாலயத்தின் வளாகத்தில் அமைந்து இருக்கும் கல்வெட்டுப் பாறைக்கு செரோக் தோக்குன் கல்வெட்டுப் பாறை என்று பெயர்.[6] செரோக் தோக்குன் கல்வெட்டில் பாலி மொழியைச் சார்ந்த பல்லவ எழுத்துகள் உள்ளன. தமிழ் மொழியைச் சார்ந்த தமிழ் எழுத்துகள் உள்ளன. சமஸ்கிருத எழுத்துகளும் கலந்து வருகின்றன.[7] பூஜாங் சமவெளி![]() பினாங்கு; புக்கிட் மெர்தாஜாம்; செரோக் தெக்குன்; செபராங் பிறை (புராவின்ஸ் வெல்லஸ்லி) ஆகிய பகுதிகள் பண்டைய கடாரத்தின் ஒரு பகுதியாகும். கடாரம் பரந்த படர்ந்த ஒரு பெரும் பகுதி. பல்லவத் தமிழர்கள் ஆட்சி செய்த பகுதி. கடாரம் எனும் தமிழ்ப் பெயரில் இருந்து தான் கெடா எனும் பெயர் தோன்றியது. கடாரம் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் பூஜாங் சமவெளியில் புகழ்பெற்று விளங்கிய மாபெரும் பேரரசு. அந்த வகையில் கடாரத்தை, பூஜாங் பேரரசு என்றும் அழைக்கலாம். பூஜாங் நாகரிகம் என்றும் அழைக்கலாம். புனித அன்னாள் தேவாலயம்புனித அன்னாள் தேவாலயம் 1888-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. புக்கிட் மெர்தாஜாமில் மிக எளிதாக அடையாளம் காணக்கூடிய இடங்களில் ஒன்றாகும். இது பினாங்கு ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் திருச்சபைகளில் ஒன்றாகச் செயல் படுகின்றது. ஒவ்வோர் ஆண்டும், தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய நோவெனா பண்டிகை இங்கு கொண்டாடப் படுகிறது. ஏறக்குறைய 100,000 பார்வையாளர்களை ஈர்க்கிறது. [8] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia