தஞ்சோங் பூங்கா
தஞ்சோங் பூங்கா (ஆங்கிலம்: Tanjung Bungah அல்லது Tanjong Bungah; மலாய் மொழி: Tanjong Bungah; சீனம்: 丹绒武雅; ஜாவி: تنجوڠ بوڠاه) என்பது மலேசியா, பினாங்கு, ஜார்ஜ் டவுன் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகர் குடியிருப்புப் பகுதி ஆகும். இந்தப் புறநகர் குடியிருப்புப் பகுதி பினாங்கு தீவின் வடக்கு கடற்கரையில் பத்து பெரிங்கி (Batu Ferringhi) மற்றும் தஞ்சோங் தொக்கோங் (Tanjung Tokong) நகர்ப் பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளது. அதே வேளையில் ஜார்ஜ் டவுன் நகர மையத்தில் இருந்து சுமார் 6.5 கி.மீ. (4.0 மைல்) வடமேற்கில் உள்ளது. பொதுதஞ்சோங் பூங்கா ஒரு பிரபலமான கடற்கரை இடமாக அறியப் படுகிறது. இங்குள்ள கடற்கரையில் பல தங்கும் விடுதிகள் மற்றும் ஓய்வு விடுதிகள் வரிசையாக உள்ளன. இங்கு பல பத்தாண்டுகளாக நகரமயமாக்கல் நடைபெற்று வருகிறது. அதனால் இங்கு உயரமான கட்டிடங்கள் காளான்கள் போல தோன்றி உள்ளன. தஞ்சோங் பூங்கா புறநகர்ப் பகுதியில் குறிப்பிடத்தக்க அளவிற்கு வெளிநாட்டினர் வசிக்கின்றனர். 2010-ஆம் ஆண்டு நிலவரப்படி தஞ்சோங் பூங்காவின் மக்கள் தொகையில் வெளிநாட்டினர் 5.7% விழுக்காடாக உள்ளனர்.[1] 1960 - 1970-ஆம் ஆண்டுகளில் பினாங்கில் பணிபுரிந்த அரச ஆஸ்திரேலிய விமானப்படை வீரர்கள் (Royal Australian Air Force) பலர் இங்குதான் தங்கி இருந்தனர்.[2][3] இந்த இடம் பினாங்குத் தீவின் வடக்குக் கடற்கரையில் அமைந்து இருப்பதால், 2004 இந்தியப் பெருங்கடல் சுனாமியால் (2004 Indian Ocean Tsunami) கடுமையாகப் பாதிக்கப்பட்டது.[4] சொல் பிறப்பியல்ஆங்கிலத்தில் மலர் முனை (Flower Cape) என்று பொருள்படும் தஞ்சோங் பூங்காவில், கடற்கரையில் இருந்து கடலுக்குள் செல்லும் பல சிறிய முனைகள் உள்ளன. அதன் காரணமாக அவ்வாறு பெயரிடப்பட்டது. வரலாறு![]() ![]() தஞ்சோங் பூங்கா முன்பு காலத்தில் மலாய் மற்றும் சீன மீனவர்கள் வசிக்கும் அமைதியான ஒரு மீன்பிடி கிராமமாக இருந்தது. 1950-களில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே, அவர்களுக்குப் பிடித்த கடற்கரைத் தளமாக முக்கியத்துவம் பெற்று இருந்தது. அந்த நேரத்தில், பத்து பெரிங்கி வளர்ச்சி பெற்று இருக்கவில்லை. தஞ்சோங் பூங்கா கடற்கரைக்கு அப்பால் தெளிவான நீர்நிலைகள் இருந்ததால், பினாங்கு நீச்சல் மன்றம் (Penang Swimming Club) மற்றும் பினாங்கு சீனர் நீச்சல் மன்றம் (Penang Chinese Swimming Club) என இரண்டு உள்ளூர் நீச்சல் மன்றங்கள் தோன்றின. ஆஸ்திரேலிய விமானப்படை வீரர்கள்மலாயா அவசரகாலத்தின் (Malayan Emergency) போதும்; மலேசிய இந்தோனேசிய மோதலின் (Indonesian Confrontation) போதும் பினாங்கில் பணி செய்து கொண்டிருந்த அரச ஆஸ்திரேலிய விமானப்படை வீரர்கள் தஞ்சோங் பூங்காவில் உள்ள அவர்களின் குடியிருப்புகளில் தஞ்சம் அடைவது வழக்கம். அந்தக் காலக் கட்டத்தில் அரச ஆஸ்திரேலிய விமானப்படை வீரர்களின் மனைவிமார்கள், பொழுதுபோக்கிற்காக ஆர்.ஏ.ஏ.எப். ரேடியோ (Radio RAAF) எனும் ஓர் ஆங்கில மொழி வானொலி நிலையத்தை இயக்கி வந்தனர். இந்த வானொலி நிலையத்தின் ஒலிபரப்புகள்; பினாங்கு மாநிலம், மற்றும் கெடா மாநிலத்தின் சில பகுதிகள் வரை ஒலிபரப்பு செய்யப்பட்டன.
தஞ்சோங் பூங்கா நகரமயமாக்கல்![]() தஞ்சோங் பூங்கா நகரமயமாக்கல் 1980-களில் தொடங்கியது. அந்த வகையில் தஞ்சோங் பூங்கா கடற்கரையோரத்தில் ஏராளமான குடியிருப்பு கட்டிடங்கள் கட்டுவதற்கு வழிவகுத்தது. ஜார்ஜ் டவுன், தஞ்சோங் தோக்கோங்கில் உள்ள வணிக வளாகங்கள்; மற்றும் பத்து பெரிங்கியின் கடற்கரைகள், தஞ்சோங் பூங்காவின் புறநகர்ப் பகுதியில் அமைந்து இருந்ததால், பினாங்குத் தீவில் ஓய்வு பெற விரும்பிய வெளிநாட்டினரையும் தஞ்சோங் பூங்கா ஈர்த்தது.[2] அனைத்துலகப் பள்ளிகள்அத்துடன் இங்கு நான்கு அனைத்துலகப் பள்ளிகளும் நிறுவப்பட்டுள்ளன:
2004 இந்தியப் பெருங்கடல் சுனாமியின் போது (2004 Indian Ocean Tsunami) தஞ்சோங் பூங்கா கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அந்த ஆழிப்பேரலை 52 உயிர்களைப் பலிகொண்டது. 2005-ஆம் ஆண்டில் இங்கு மிதக்கும் பள்ளிவாசல் (Floating Mosque) ஒன்று கட்டப்பட்டது. அதன் பெயர் பினாங்கு மிதக்கும் பள்ளிவாசல். அதுவே இப்போது தஞ்சோங் பூங்காவில் ஒரு முக்கிய அடையாளமாகத் திகழ்கின்றது. காட்சியகம்மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia