வட செபராங் பிறை மாவட்டம் (ஆங்கிலம்: North Seberang Perai District; மலாய்: Daerah Seberang Perai Utara (SPU); சீனம்: '威北县); ஜாவி: دسبرڠ ڤراي اوتارا ) என்பது மலேசியாவின்பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். பினாங்கு மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.
இந்த மாவட்டம் 267 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 2010-ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 286,323 மக்கள் தொகையைக் கொண்டு இருந்தது.
பொது
இந்த மாவட்டத்தின் வடக்கில் மூடா ஆறு செல்கிறது. இந்த ஆறு கெடா மாவட்டத்தில் உள்ள கோலா மூடா மாவட்டத்தையும்; வட செபராங் பிறை மாவட்டத்தையும் எல்லையாகக் கொண்டு, இரு மாவட்டங்களையும் பிரிக்கின்றது
இந்த மாவட்டத்தின் தலைநகரம் கெப்பாலா பத்தாஸ். மாவட்டத்தின் மிகப்பெரிய நகரம் பட்டர்வொர்த். வடக்கு செபராங் பிறையில் அமைந்துள்ள பிற இடங்கள்: பெனாகா, பினாங்கு துங்கல், பெர்டா, தாசெக் குளுகோர், தெலுக் ஆயர் தாவார் மற்றும் மாக் மண்டின்.
பினாங்கு மாநிலத்தின் செபராங் பிறை பகுதியில் உள்ள மூன்று நிர்வாக மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும். இந்த வட செபராங் பிறை மாவட்டத்தில் பெரும்பாலும் நெல் பயிரிடப் படுகிறது. இந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் நெல் வயல்களைக் கொண்டவை ஆகும்.
கீழ்க்காணும் புள்ளிவிவரங்கள், 2010-ஆம் ஆண்டு, மலேசியாவின் புள்ளியியல் துறையால் நடத்தப்பட்ட தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கப் படுகிறது.[2]
இனக்குழுக்கள்
இனம்
மக்கள் தொகை
விழுக்காடு
மலாய்க்காரர்கள்
173,647
60.6%
சீனர்கள்
88,968
31.1%
இந்தியர்கள்
22,973
8.0%
மற்றவர்கள்
735
0.3%
மொத்தம்
286,323
100%
நாடாளுமன்றத் தொகுதிகள்
மலேசிய நாடாளுமன்றத்தில் வடக்கு செபராங் பிறை மாவட்ட பிரதிநிதிகளின் பட்டியல் மலேசிய மக்களவை
மலேசியா; பினாங்கு; வட செபராங் பிறை மாவட்டத்தில் (North Seberang Perai District); 5 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,046 மாணவர்கள் பயில்கிறார்கள். 99 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[3]
"Population Distribution and Basic Demographic Characteristics, 2010" (PDF). Department of Statistics, Malaysia. Archived from the original (PDF) on 22 May 2014.
"2017 Q2 statistics" (PDF). Penang Institute. Archived from the original (PDF) on 2017-12-01.