சோடியம் மாலிப்டேட்டு
சோடியம் மாலிப்டேட்டு (Sodium molybdate) என்பது Na2MoO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் மாலிப்டினம் தயாரிப்புக்கு உதவும் ஒரு பயனுள்ள மூலப்பொருளாகும்[2]. பெரும்பாலும் Na2MoO4•2H2O என்ற இருநீரேற்று வடிவத்திலேயே இது காணப்படுகிறது. மாலிப்டேட்டு(VI) எதிர்மின் அயனி ஒரு நான்முகியாகும். இரண்டு சோடியம் நேர்மின் அயனிகள் ஒவ்வொரு எதிர்மின் அயனியுடன் ஒருங்கிணைவு கொண்டுள்ளன[3]. வரலாறுநீரேற்ற செயல்முறை மூலமாக முதன் முதலில் சோடியம் மாலிப்டேட்டு தயாரிக்கப்பட்டது[4]. MoO3 சேர்மத்தை 50-70° செல்சியசு வெப்பநிலையில் சோடியம் ஐதராக்சைடில் கரைத்து வடிகட்டிய விளைபொருளை படிகமாக்கி ஒரு வசதியான முறையிலும் இது தயாரிக்கப்படுகிறது[3]. 100 ° செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்குவதால் நீரிலி வடிவம் கிடைக்கிறது.
பயன்கள்ஓர் உரமாக 1 மில்லியன் பவுண்டுகள் சோடியம் மாலிப்டேட்டை வேளாண் தொழிற்சாலைகள் பயன்படுத்துகின்றன. குறிப்பாக மாலிப்டினக் குறைபாடுள்ள மண்ணில் வளரும் மெலிந்த நிலையிலிருக்கும் கோசு, காலிஃபிளவர் எனப்படும் பூக்கோசு போன்றவற்றுக்கான சிகிச்சையில் இச்சேர்மத்தைப் பயன்படுத்துகிறார்கள்[5][6]. இருப்பினும் இதைப் பயன்படுத்துவதில் கவனம் தேவைப்படுகிறது. ஏனெனில் மில்லியனுக்கு 0.3 பகுதிகள் சோடியம் மாலிப்டேட்டைப் பயன்படுத்தும் விலங்குகளில் குறிப்பாக கால்நடைகளில் தாமிரக் குறைபாடு நோய்கள் உருவாகின்றன[3]. நேர்மின் முனையில் ஆக்சிசனேற்றம் செய்யாத தடுப்பைக் ஏற்படுத்துவதால் தொழிற்சாலைகளில் அரிமானத்தைத் தடுக்கும் பொருளாக இதைப் பயன்படுத்துகிறார்கள் [3]. நைட்ரைட்டு-அமீன்களால் பாதிக்கப்பட்டு நைட்ரைட்டு தேவைப்படும் பாய்மங்களில் சோடியம் மாலிப்டேட்டு சேர்க்கப்படும்போது அக்குறைபாடு சரிசெய்யப்படுகிறது. கார்பாக்சிலேட்டு உப்பு பாய்மங்களில் அரிமானப் பாதுகாப்பு மேம்பாடு அடைகிறது [7]. தொழிற்சாலைகளில் நீர்சுத்திகரிப்பு பயன்பாடுகள் உள்ள இடங்களில் எங்கெல்லாம் ஈருலோக கட்டுமானங்கள் மின்னோட்டத்தால் அரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் சோடியம் நைட்ரைட்டின் பாதிப்பைக் குறைக்க சோடியம் மாலிப்டேட்டு விரும்பப்படுகிறது. மில்லியனுக்குப் பகுதிகள் என்ற அளவீட்டில் சோடியம் மாலிப்டேட்டை குறைந்த அளவு பயன்படுத்துவது சுழலும் தண்ணீர் குறைந்த கடத்துத்திறனை அனுமதிக்கிறது. மில்லியனுக்கு 50-100 பகுதிகள் சோடியம் மாலிப்டேட்டு அளவு சோடியம் நைட்ரைட்டின் மில்லியனுக்கு 800+ பகுதிகள் என்ற அளவு அளிக்கும் தைடைக்கு சமமானதாக இருக்கிறது. குறைந்த அடர்த்தி சோடியம் மாலிப்டேட்டைப் பயன்படுத்தினால் அரிமானத்தின் அளவும் குறைக்கப்படுகிறது [8]. வினைகள்சோடியம் போரோ ஐதரைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்தால் மாலிப்டினம் ஒடுக்கப்பட்டு குறைந்த இணைதிறன் ஆக்சைடாக மாற்றப்படுகிறது:[9]
டைதயோபாசுப்பேட்டு அமிலங்களுடன் சோடியம் மாலிப்டேட்டு வினைபுரிகிறது:[3]
பின்னர் இது மேலும் வினைபுரிந்து [MoO3(S2P(OR)2)4]. என உருவாகிறது. தற்காப்புசோடியம் மாலிப்டேட்டு சேர்மம் கார உலோகங்கள், மிகப்பொதுவான உலோகங்கள், ஆக்சிசனேற்ற முகவர்கள் ஆகியனவற்றுடன் சேர்ந்திருப்பது பொருத்தமற்றதாகக் கருதப்படுகிறது. உருகிய மக்னீசியத்துடன் தொடர்பு கொள்ள நேர்ந்தால் இது வெடிக்கும். மற்றும் புரோமின் பென்டாபுளோரைடு; குளோரின் ட்ரைபுளோரைடு போன்ற ஆலசனிடை சேர்மங்களுடன் இச்சேர்மம் தீவிரமாக வினைபுரிகிறது. சூடான சோடியம், பொட்டாசியம் அல்லது இலித்தியம் ஆகியவற்றுடன் வினை புரிகையில் ஒளிரும் தன்மையுடன் வினைபுரிகிறது [10]. மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia