ச. காந்திராஜன்ச. காந்திராஜன் (S. Gandhirajan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1989, 1991, மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் திண்டுக்கல் மாவட்டத்தின் (முன்னர் பழனி நாடாளுமன்றத்தின் கீழும் இருந்த இச்சட்டமன்றத் தொகுதி தற்போது கரூர் நாடாளுமன்றத்தின் கீழ் உள்ளது)[1] வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தலில் போட்டியிட்ட இவர், 1991 மற்றும் 2021 தேர்தல்களில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1993 முதல் 1996வரை சட்டப் பேரவை துணை சபாநாயகராகவும் பணியாற்றியுள்ளார்.[2] அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் 2009ஆம் ஆண்டில் சேர்ந்தார்.[3][4] 2021ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத்திற்கு நடைபெற்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[5] போட்டியிட்ட தேர்தல் விவரம்
References
|
Portal di Ensiklopedia Dunia