ஜி. எம். குமார் |
---|
பிறப்பு | கோவிந்தராஜ் மனோகரன் குமார்[1] 26 சூலை 1957 (1957-07-26) (அகவை 67)[2] தமிழ்நாடு, சென்னை |
---|
பணி | நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர், எழுத்தாளர் |
---|
செயற்பாட்டுக் காலம் | 1986–தற்போது வரை |
---|
ஜி. எம். குமார் (G. M. Kumar) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநரும், நடிகரும் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளார்.[3][4]
தொழில்
குமார் சிவாஜி புரொடக்சன்சின் தயாரிப்பில், பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அறுவடை நாள் (1986) படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இது குமார் பல படங்களை உருவாக்க வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது. இருப்பினும் இளையராஜாவை இசையமைப்பாளராக நியமிக்க விரும்பாத தயாரிப்பாளர்களின் படங்கள் பலவற்றை நிராகரித்ததாக குறிப்பிட்டார். இதனால் இவரது வணிக மதிப்பு கணிசமாகக் குறைந்து. இவரது ஆரம்ப வெற்றிக்குப் பிறகு மூன்று திரைப்படங்களை மட்டுமே இயக்கினார். உருவம் படத்தை இயக்கி, தயாரிக்க எடுத்த முடிவானது இவரை திவால் நிலைக்கு தள்ளியது. பாரதிராஜாவின் கேப்டன் மகள் (1992) படத்தில் எதிர்மறை பாத்திரத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் ஆவணப்படங்களை உருவாக்குவதற்கும் மானுடவியல் குறித்து அறிவதற்குமான பணிகளில் ஈடுபட்டார். 2000 களின் முற்பகுதியில், இவர் மீண்டும் திவாலாகும் நிலையின் விளிம்பில் இருந்தார். மேலும் ராமச்சந்திரா, வெளியிடப்படாத சிவலிங்கம் ஐ. பி. எஸ் உள்ளிட்ட படங்களில், சிறு வேடங்களில் நடிக்க ராஜ்கபூர் இவரை தேர்வு செய்தார். பின்னர் ஷங்கரின் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கபட்ட வெயில் (2006) படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.[5]
மேலும் இவரை அவன் இவானில் ஹைனெஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க பாலா அணுகினார். அப்படத்தில் இவரது நடிப்பு இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருதுக்கான பரிந்துரையைப் பெற்றுத்தந்தது. விமர்சகர்கள் இவரது நடிப்பை "ரிவெர்டிங்" என்று அழைத்தனர். இருப்பினும் படம் சராசரி விமர்சனங்களை மட்டுமே பெற்றது.[6]
திரைப்படவியல்
நடிகராக
இயக்குநராக
எழுத்தாளராக
தொலைக்காட்சி
வலைத் தொடர்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்