10 ஆகத்து 2020 (2020-08-10) – 18 சூன் 2022 (2022-06-18)
பூவே உனக்காக என்பது சன் தொலைக்காட்சியில் 10 ஆகஸ்ட் 2020 முதல் 18 சூன் 2022 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான காதல் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் ராதிகா பிரீத்தி, வர்ஷினி அர்சா மற்றும் முகமது அஸீம் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, இயக்குநர் தங்கபாண்டியன் என்பவர் இயக்கியுள்ளார்.[1] இத்தொடர் 18 சூன் 2022 அன்று 572 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
கதை சுருக்கம்
பூவரசி (ராதிகா பிரீத்தி) மற்றும் கீர்த்தி (ஜோவிதா லிவிங்ஸ்டன் ஜோன்ஸ்) இருவரும் சிறந்த நண்பர்கள். மேலும் இருவரும் நண்பர்களாக எப்போதும் நிலைத்திருப்பார்கள் என்று நம்புகிறார்கள். பூவரசி தனது தாயிடம் யாரையும் காதலிக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறாள். அதே தருணம் அவளுக்கு விரும்பாத திருமணத்தை அவளின் தாய் நடத்த ஏட்பாடுகள் செய்யப்படுகின்றது. இவளின் கனவில் ஒரு மர்ம மனிதனைப் பற்றி கனவு காண்கிறாள். அவன் பெய ர் கதிர் (அருண்), ஒரு பணக்கார மற்றும் அழகான இளைஞன், கீர்த்தியை முதல் பார்வையில் காதலிக்கிறான். ஆனால் விதியின் சதியால் பூவரசியை கதிர் திருமணம் செய்கின்றான். திடீரென கீர்த்தி இறக்க கதிர் மற்றும் பூவரசியின் வாழ்வில் நடக்கப்படும் மாற்றங்களை இந்த தொடர் விளக்குகின்றது.
ஸ்ரீலேகா ராஜேந்திரன் - மாரியம்மா (2020 - ஜூன் 2021)
ஸ்ரீதேவி அசோக் - தனலட்சுமி (2020 - மே 2021)
சுராஜ் நாயுடு - கேசவன் (2020 - 2021)
அஜய் ரத்தினம் - சிவநாராயன் (2020)
ஜி.எம்.குமார் - சங்கரலிங்கம் (2020 - 2021)
உஷா எலிசபெத் - கற்பகம் (2020) தொடரில் இறந்துவிட்டார்
பிரேமலதா - லட்சுமி (2021)
சுதா - ராஜலட்சுமி சிவநாராயணன்
ஒளிபரப்பு நேரம் மாற்றம்
இந்த தொடர் முதலில் கல்யாண வீடு என்ற தொடரின் ஒளிபரப்பு நேரத்திற்கு பதிலாக 10 ஆகத்து 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை சனி இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் 16 நவம்பர் 2020 முதல் 28 நவம்பர் 2020 வரை இரவு 7:30 மணி முதல் 8:30 மணி வரை 1 மணித்தியாலம் ஒளிபரப்பாகி, நவம்பர் 30, 2020 முதல் இரவு 8 மணிக்கும் நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பானது, பின்னர் 18 அக்டோபர் 2021 முதல் இரவு 10 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி, 7 பிப்ரவரி 2022 முதல் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஒளிபரப்பான திகதி
நாட்கள்
நேரம்
அத்தியாயங்கள்
10 ஆகத்து 2020 - 13 நவம்பர் 2020
திங்கள் - சனி
19:30
1-76
16 நவம்பர் 2020 - 28 நவம்பர் 2020
திங்கள் - சனி
19:30 - 20:30
77-88
30 நவம்பர் 2020 - 16 அக்டோபர் 2021
திங்கள் - சனி
20:00
89-365
18 அக்டோபர் 2021 - 5 பிப்ரவரி 2022
திங்கள் - வெள்ளி
22:30
மதிப்பீடுகள்
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.