ஜெயா குகநாதன்

ஜெயா குகநாதன்
பிறப்புஜெயா
இலங்கை
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1967-1980
வாழ்க்கைத்
துணை
வி. சி. குகநாதன்

ஜெயா குகநாதன் (Jaya Guhanathan) தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்த இந்தியத் திரைப்பட நடிகையாவார்.[1] ஒரு தலைமுறை காலமாக நடித்தார். ஏறத்தாழ 100 திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

ஜெயாவும் வி.சி.குகநாதனும் தங்களுடைய படப்பிடிப்பின் போது ஒருவரையொருவர் காதலித்தனர்.[1] இறுதியில் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். ஜெயா சரளமாக தமிழ் பேசுபவர்.

திரைப்பட வாழ்க்கை

சென்னை எஸ்ஐஇடி கல்லூரியில் பியுசி படித்துக் கொண்டிருந்தபோது, விசி குகநாதனால் திரைப்படங்களில் நடிக்க வற்புறுத்தப்பட்டார். 1971 ஆம் ஆண்டு தமிழில் சுடரும் சூரவளியும் என்ற திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஆர். முத்துராமன், சந்திர மோகன் ஆகியோருக்கு சோடியாக அறிமுகமானார். இவர் 1980 இல் நடிப்பதை நிறுத்த முடிவு செய்தார். இவர் கடைசியாக அறியிருந்து அருபது வரை திரைப்படத்தில் நடித்திருந்தார்.

நடித்த திரைப்படங்களில் சில

தமிழ்

ஆண்டு திரைப்படம் உடன் நடித்தவர்கள் கதாபாத்திரம்
1971 சுடரும் சூறாவளியும்[1] ஜெமினி கணேசன், ஆர். முத்துராமன், சந்திர மோகன், வெண்ணிற ஆடை நிர்மலா
1972 இராணி யார் குழந்தை ஜெய்சங்கர், ஆர். முத்துராமன், இலட்சுமி
அன்னை அபிராமி சிவகுமார், கே. ஆர். விஜயா
தெய்வம் ஜெமினி கணேசன், ஏ. வி. எம். ராஜன், ஆர். முத்துராமன், சிவகுமார், கே. ஆர். விஜயா, சௌகார் ஜானகி தேவனை
கனிமுத்து பாப்பா ஜெய்சங்கர், ஆர். முத்துராமன், இலட்சுமி, இராஜலட்சுமி
மிஸ்டர் சம்பத் ஆர். முத்துராமன், சோ ராமசாமி
1973 காசி யாத்திரை வி. கே. ராமசாமி, ஸ்ரீகாந்த் சீதா
தெய்வக் குழந்தைகள் ஜெய்சங்கர், ஆர். முத்துராமன், வாணிஸ்ரீ, பத்மினி
இறைவன் இருக்கின்றான் ஜெய்சங்கர்
சண்முகப்பிரியா ஆர். முத்துராமன், சிவகுமார், ஜெயந்தி
பெத்த மனம் பித்து ஆர். முத்துராமன், சாவித்திரி, ஜெயசுதா
ராஜபார்ட் ரங்கதுரை சிவாஜி கணேசன், ஸ்ரீகாந்த், உஷா நந்தினி
1974 அன்புத்தங்கை ஆர். முத்துராமன், ஸ்ரீகாந்த், ஜெ. ஜெயலலிதா
மகளுக்காக ஏ. வி. எம். ராஜன்
பாதபூஜை சிவகுமார், ஜெயசித்ரா
1975 திருவருள் ஏ. வி. எம். ராஜன்
மஞ்சள் முகமே வருக விஜயகுமார், சத்தியப்பிரியா
1976 தசாவதாரம் இரவிக்குமார், ஜெமினி கணேசன் பிரின்சஸ் திரௌபதி/பாஞ்சாலி
கிரஹப்பிரவேசம் சிவாஜி கணேசன், சிவகுமார், கே. ஆர். விஜயா
தாயில்லாக் குழந்தை விஜயகுமார், ஏ. வி. எம். ராஜன், ஜெயசித்ரா, ஜெய்கணேஷ்
நல்ல பெண்மணி ஆர். முத்துராமன், ஸ்ரீவித்யா, சௌகார் ஜானகி
1977 நவரத்தினம் ம. கோ. இராமச்சந்திரன் கோமதி
புவனா ஒரு கேள்விக்குறி சிவகுமார், இரசினிகாந்து, சுமித்ரா இராஜி
"முருகன் அடிமை ஆர். முத்துராமன், விஜயகுமார், ஏ. வி. எம். ராஜன், கே. ஆர். விஜயா
1978 முள்ளும் மலரும் இரசினிகாந்து, சரத் பாபு, ஷோபா, படாபட் ஜெயலட்சுமி
கருணை உள்ளம் ஸ்ரீகாந்த், விஜயகுமார், கே. ஆர். விஜயா
தாய் மீது சத்தியம் இரசினிகாந்து, சிறீபிரியா
1979 ஆறிலிருந்து அறுபது வரை இரசினிகாந்து, படாஃபட் ஜெயலட்சுமி, சங்கீதா

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "குகநாதன் 'சுடரும் சூறாவளியும்' கதாநாயகி ஜெயாவை காதலித்து மணந்தார்பீ". archives.thinakaran.lk. Retrieved 2023-01-08.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya