திருவேற்காடு
மக்கள் வகைப்பாடு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 19 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 15,863 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 62,824 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 84% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 977 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7189 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 988 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 14,360 மற்றும் 235 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.95%, இசுலாமியர்கள் 1.4%, கிறித்தவர்கள் 5.13% , தமிழ்ச் சமணர்கள் .04%, மற்றும் பிறர் 0.47% ஆகவுள்ளனர்.[4] திருத்தலங்கள்தேவாரப்பாடல் பெற்ற திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் மற்றும் திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் ஆகியவை திருவேற்காட்டில் அமைந்துள்ளன. மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia