டெட்ரா அயோடின் நோனாக்சைடு
டெட்ரா அயோடின் நோனாக்சைடு (Tetraiodine nonoxide) என்பது I4O9 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவோர் அயோடின் ஆக்சைடு சேர்மமாகும். தயாரிப்புகார்பன் டெட்ராகுளோரைடில் உள்ள அயோடின் மற்றும் ஓசோனை −78 °செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்வதன் மூலம் டெட்ரா அயோடின் நோனாக்சைடை உருவாக்கலாம்.:[2][3]
அயோடிக் அமிலத்துடன் பாசுபாரிக் அமிலத்தைச் சேர்த்து சூடுபடுத்தினல் டெட்ரா அயோடின் நோனாக்சைடு உருவாகிறது.:[4]
பண்புகள்டெட்ரா அயோடின் நோனாக்சைடு வெளிர் மஞ்சள் நிறத்தில் ஒரு திடப்பொருளாகக் காணப்படுகிறது. எளிதில் நீராற்பகுப்பு வினைக்கு உட்படும். 75 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சிதைவடையும்.[2]
ஈரயோடின் டெட்ராக்சைடைப் போலவே, டெட்ரா அயோடின் நோனாக்சைடும் I(III) மற்றும் I(V) இரண்டு சேர்மங்களையும் கொண்டுள்ளது, மேலும் கார நிலைமைகளின் கீழ் அயோடேட்டு மற்றும் அயோடைடுகளாக விகிதாசாரமற்று மாறுகிறது.[2]
டெட்ரா அயோடின் நோனாக்சைடு தண்ணீருடன் வினையில் ஈடுபட்டு அயோடிக் அமிலத்தையும் அயோடினையும் கொடுக்கிறது:[3]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia