இண்டியம்(I) அயோடைடு
இண்டியம் மோனோ அயோடைடு (Indium monoiodide) என்பது InI என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இண்டியம் உலோகமும் அயோடினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2] தயாரிப்புஇண்டியம் மற்றும் அயோடின் அல்லது இண்டியம் மற்றும் இண்டியம்(III) அயோடைடை வெற்றிடத்தில் 300 °செல்சியசு முதல் 400 °செல்சியசு வெப்பநிலையில் அல்லது இண்டியத்துடன் பாதரசம்(II) அயோடைடை 350 °செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் இண்டியம் மோனோ அயோடைடு உருவாகும்.[3]
இயற்பியல் பண்புகள்இண்டியம்(I) அயோடைடு பழுப்பு-சிவப்பு காந்த திடப்பொருளாக உருவாகிறது. இதன் உருகுநிலையில் கருப்பு நிறமாகக் காணப்படுகிறது. a = 475 பைக்கோமீட்டர், b = 1276 பைக்கோமீட்டர், c = 491 பைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் Cmcm (இடக்குழு எண். 63) என்ற இடக்குழுவில் செஞ்சாய்சதுரப் படிகக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.[5] வேதிப் பண்புகள்தண்ணிருடன் சேர்க்கப்பட்டால் மெல்ல சிதைவடைகிறது:
ஆக்சிசன் முன்னிலையில் தண்ணிருடன் வினைபுரிகிறது:[6]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia