தஞ்சாவூர் ஓமளிப் பிள்ளையார் கோயில்![]() தஞ்சாவூர் ஓமளிப் பிள்ளையார் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் உள்ள விநாயர் கோயில்களில் ஒன்றாகும். அமைவிடம்இக்கோயில் மேலவீதியில் கொங்கனேசுவரர் கோயிலுக்கு சற்று முன்பாகக் காணப்படுகிறது. தேவஸ்தான கோயில்தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] [2] மூலவர்மூலவர் சன்னதியில் ஓமளிப் பிள்ளையார் உள்ளார். வித்தியாசமான விநாயகர்கள்நெல்லை மாவட்டம் மேகலிங்கபுரத்தில் ஆசியாவின் பெரிய விநாயகர், தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழியில் ஒன்பது அங்குல சுவேத விநாயகர், திருப்புறம் சாட்சிநாதர் கோயிலில் தேனை உறிஞ்சும் பிரளயம் காத்த விநாயகர், சீர்காழி திருமணிக் கூடத்தில் உள்ள சிரத்தில் இளநீர் இறங்கும் விநாயகர், திருவாரூர் மாவட்டம் ராமநாதர் கோயிலில் மனித முகத்துடன் நரமுக விநாயகர் என்றவாறு பல விநாயகர்கள் காணப்படுகின்றனர். [3] கும்பகோணத்தில் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் உள்ளார். அவ்வரிசையில் இங்குள்ள விநாயகர் ஓமளிப்பிள்ளையார் என்றழைக்கப்படுகிறார். தஞ்சாவூரில் அர்ச்சகசாலைப் பிள்ளையார் கோயில் என்ற பெயரிலும் விநாயகர் கோயில் உள்ளது. அமைப்புநுழைவாயில், கருவறை, மண்டபம் போன்ற அமைப்புகளைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. வளாகத்தில் இடது புறம் உற்சவக் கோடியம்மன் கோயில் உள்ளது. இரு கோயிலுக்கும் தனித் தனி வாயில்கள் உள்ளன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia