திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருநாகை சௌந்தர்யராஜன் (சவுந்தரராஜபெருமாள்) திருக்கோயில் [1]
திருநாகை சௌந்தர்யராஜன் (சவுந்தரராஜபெருமாள்) திருக்கோயில் [1] is located in தமிழ்நாடு
திருநாகை சௌந்தர்யராஜன் (சவுந்தரராஜபெருமாள்) திருக்கோயில் [1]
திருநாகை சௌந்தர்யராஜன் (சவுந்தரராஜபெருமாள்) திருக்கோயில் [1]
சௌந்தரராஜ பெருமாள் கோயில், நாகப்பட்டினம், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூற்று:10°45′38″N 79°50′25″E / 10.7606°N 79.8402°E / 10.7606; 79.8402
பெயர்
புராண பெயர்(கள்):சௌந்தர்ய ஆரண்யம், சுந்தராரண்யம்
பெயர்:திருநாகை சௌந்தர்யராஜன் (சவுந்தரராஜபெருமாள்) திருக்கோயில் [1]
அமைவிடம்
ஊர்:நாகப்பட்டினம்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:நீலமேகப் பெருமாள் (நின்ற திருக்கோலம்)
உற்சவர்:சௌந்தர்யராஜன்
தாயார்:சௌந்தர்யவல்லி
உற்சவர் தாயார்:கஜலஷ்மி
தீர்த்தம்:சாரபுஷ்கரிணி
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத்திவ்ய பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:திருமங்கையாழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
விமானம்:சௌந்தர்ய விமானம் (பத்ரகோடி விமானம்)
கல்வெட்டுகள்:உண்டு
தொலைபேசி எண்:+91-94422 13741, 4365 - 221 374[2]

திருநாகை சௌந்தர்யராஜன் திருக்கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 19-ஆவது திவ்யதேசம் ஆகும்.

தலவரலாறு

நான்கு யுகங்களிலும் வழிபடப்படும் தலம். ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின் சயனமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தலம். ஆதிசேஷன் வழிபட்ட காரணத்தாலேயே இவ்வூர் நாகன்பட்டினம் என்றாகி, பின்னர் நாகப்பட்டினம் என மாறியது. திரேதாயுகத்தில் பூமாதேவி தவமிருந்த திருத்தலம், துவாபரயுகத்தில் மார்க்கண்டேயர் தவமிருந்த திருத்தலம்.

அமைப்பு

மூலவர் விமானம்
கோயிலின் உள்ளே அமைந்துள்ள சன்னதிகள்
Temple tank
கோயில் சுவர்களில் காணப்படும் சன்னதிகள்

ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலி படமும், கொடி மரமும் உள்ளன. அடுத்து கருடாழ்வார் சன்னதி உள்ளது. கோயிலின் வலது புறம் கோயில் குளம் உள்ளது. கருவறையில் மூலவர் சௌந்தரராஜபெருமாள் நின்ற நிலையில் உள்ளார். மூலவர் சன்னதிக்கு முன்பாக முன்பாக உள்ள மண்டபத்தின் வாயிலில் இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர். அம்மண்டபத்தில் சௌந்தரராஜபெருமாள் கிடந்த திருக்கோலத்தில் உள்ளார். அடுத்து சேனை முதல்வர் சன்னதியும், ஆழ்வார் ஆச்சார்யன் சன்னதியும் உள்ளன. கருவறையைச் சுற்றியுள்ள உள் திருச்சுற்றில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. திருச்சுற்றில் வைகுண்டநாதர் சன்னதி, சௌந்தரவள்ளித் தாயார் சன்னதி, சீனிவாசப்பெருமாள் சன்னதி, ஆண்டாள் சன்னதி, ராமர் சன்னதி, வீர ஆஞ்சநேயர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. ஆண்டாள் சன்னதிக்கு முன்பாக கொடி மரம் உள்ளது.

பிரம்மாண்ட புராணம்

இத்திருத்தலம் குறித்த தகவல்கள் பிரம்மாண்ட புராணத்தின் உத்திர காண்டத்தில் 10 அத்தியாயங்களில் சௌந்திர ஆரண்ய மகிமை என்ற பெயரில் உள்ளன.

பேருந்து வசதி

இத்திருக்கோயில் அருகாக, மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் செல்கின்றன.[3] சென்னையில் இருந்து வருகிறவர்கள் நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இறங்கி, வேளாங்கண்ணி அல்லது திருவாரூர் மார்க்கத்தில் செல்லும் நகரப்பேருந்தில் பயணம் செய்து வந்தால் 2 கி.மீ தொலைவிலுள்ள பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் எதிர்ப்படுவது நம்பெருமாள் கோவில் ஆகும். கோயம்புத்தூர் மதுரை திருச்சி தஞ்சாவூர் மார்க்கத்தில் வருபவர்கள் பேருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக வந்தால் பழைய பேருந்து நிலையத்தின் முந்தைய நிறுத்தமான பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கலாம். பேருந்து புதிய பேருந்து நிலையத்திற்குச் சென்றால் கோட்டை வாசப்படி என்கிற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து மிக அருகில் உள்ள கோயிலை 10 நிமிட நடை பயணத்தில் வந்தடையலாம்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya