திருமணி

திருமணி (Tirumani) என்பது  தமிழ்நாட்டின், செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு நகரத்திற்கு தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும்.

தொழில்

இந்த ஊரில் பல தலை முறைகள் கடந்து, ஏராளமான குடும்பங்கள் பாரம்பரிய முறைப்படி களிமண்ணைக் கொண்டு விநாயகர் சிலைகளைச் செய்து வருகிறார்கள். விநாயக சதுர்த்திக்கு விநாயகர், நவராத்திரிக்கு கொலு பொம்மைகள், கிருஷ்ணர் சிலைகள் என மழைக்காலங்கள் தவிர மற்ற எல்லா நாட்களும் அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப சிலை செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். விநாயகர் சதுர்த்திக்காக மே மாதமே சிலைகளைச் செய்ய ஆரம்பித்துவிடுகின்றனர் மூன்று அங்குலம் தொடங்கி ஐந்து அடி உயரம் வரை பலவிதமான விநாயகர் சிலைகளை களிமணை பயன்படுத்தி செய்கின்றனர். இங்கிருந்து தமிழ்நாட்டின் கோவை, திருச்சி, மதுரை போன்ற இடங்களுக்கும், கர்நாடகம், மகாராட்டிரத்தின் மும்பை போன்ற வெளிமாநிலங்களுக்கும் விநாயகர் சிலைகள் போகின்றன.[1]

மேற்கோள்கள்

  1. பெ. ஜேம்ஸ்குமார் (1 ஆகத்து 2017). "'இது கடவுளுக்குச் செய்யும் சேவை!'". கட்டுரை. தி இந்து. Retrieved 1 ஆகத்து 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya