துரை இராமசாமி

துரை இராமசாமி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1977–1980
முன்னையவர்மு. பழனிசாமி
தொகுதிவெள்ளக்கோயில்
பதவியில்
1980–1984
பதவியில்
1985–1989
பதவியில்
1989–1991
பதவியில்
1991–1996
பின்னவர்மு. பெ. சாமிநாதன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1930-09-16)16 செப்டம்பர் 1930
மேட்டுப்பாளையம்
இறப்பு23 திசம்பர் 2023(2023-12-23) (அகவை 93)
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்விவசாயி

துரை இராமசாமி (16 செப்டம்பர் 1930-23 திசம்பர் 2023)(Durai Ramasamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழகச் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினருமாவார்.

காங்கிரசில்

பெருந்தலைவர் கே. காமராசரால் ஈர்க்கப்பட்டு அரசியலில் ஈடுபடலானார். 10 ஆண்டுக் காலம் வெள்ளக்கோயில் ஊராட்சிமன்றத் தலைவராகவும், 15 ஆண்டுகள் தொழிற்சங்கத் தலைவராகவும் பணியாற்றிய இவர் 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரசு பிளவுபட்டபோது இவர் கே. காமராசரின் என்.சி.ஓ.வில் சேர்ந்தார். பின்னர் காமராசின் திடீர் மறைவுக்குப் பிறகு, கருப்பையா மூப்பனாருடன் சேர்ந்து கட்சியை இந்திரா காங்கிரசுடன் இணைத்தார்.

அதிமுக

இவருக்கு காங்கிரசு கட்சி 1980 தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை மறுத்தது. எனவே இவர் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். இந்நேரத்தில் எம்.ஜி.ஆர் (அப்போதைய முதலமைச்சர்) இவரைத் தனது கட்சிக்கு அழைத்தார். இவர் அதிமுகவில் சேர்ந்து 1980 மற்றும் 1984 தேர்தல்களில் வெற்றி பெற்றார். 1989இல் இவர் அதிமுக (ஜெயலலிதா) அணியின் சார்பில் வெற்றிபெற்ற 28 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார்.[1] 1991 இல் மீண்டும் வெள்ளக்கோயில் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு கிராமப்புற தொழில்துறை அமைச்சரானார். ஆனால் பரவலான ஆட்சிக்கு எதிரான அலை காரணமாக 1996 இல் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்தார். 2001 இல் இவர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சுயேச்சையாகப் போட்டியிட்டார். இத்தேர்தலிலும் தோல்வியினைச் சந்தித்தார்.

சட்டமன்ற உறுப்பினராக

துரை இராமசாமி, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு ஒருமுறை இந்திய தேசிய காங்கிரசு சார்பிலும் (1977) அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் (1980, 1984, 1991) மூன்று முறையும்[2][3][4][5] மற்றும் ஒரு முறை (1989) அதிமுக (ஜெயலலிதா) சார்பிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.[6]

இறப்பு

துரை இராமசாமி, வயது முதிர்வு காரணமாக 2023 திசம்பர் 23 அன்று காலமானார்.[7]

மேற்கோள்கள்

  1. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 118.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2021-06-05.
  3. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2021-06-05.
  4. 1984 Tamil Nadu Election Results, Election Commission of India
  5. https://resultuniversity.com/election/vellakoil-tamil-nadu-assembly-constituency
  6. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
  7. https://kamadenu.hindutamil.in/politics/former-minister-durai-ramasamy-passed-away

 

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya