காரிமங்கலம்
காரிமங்கலம் (Karimangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் வட்டம் மற்றும் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். காரிமங்கலம் நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. அமைவிடம்இப்பேரூராட்சிக்கு தெற்கில் தருமபுரி 22 கி.மீ.; வடக்கில் கிருஷ்ணகிரி 24 கி.மீ.; கிழக்கில் அரூர் 65 கி.மீ.; மேற்கில்பாலக்கோடு 18 கி.மீ. மாரண்டஹள்ளி 24 கி.மீ தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு3.5 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 69 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,398 வீடுகளும், 13,511 மக்கள்தொகையும் கொண்டது.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia