நாரை (வரிசை)
நாரை வரிசை அல்லது குருயிபார்மஸ் (Gruiformes) என்பது ஏராளமான வாழும் மற்றும் அற்றுவிட்ட பறவை குடும்பங்களை உள்ளடக்கிய ஒரு வரிசையாகும். இந்த வரிசையில் உள்ள உயிரினங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்கின்றன. குருயிபார்ம் என்ற சொல்லுக்கு "நாரை-போன்ற" என்று பொருள். பாரம்பரியமாக, வேறு எந்த வரிசைக்கும் தொடர்பில்லாத நீர்நிலைகளுக்கு அருகில் இரைதேடும் பறவைகள் மற்றும் நிலவாழ் பறவைகளின் குடும்பங்கள் ஒன்றாக குருயிபார்மஸ் வரிசையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 14 பெரிய நாரைகள், சுமார் 145 இன சிறிய காணான்கோழிகள், மேலும் 1 முதல் 3 உயிரினங்களைக் கொண்டுள்ள பல்வேறுபட்ட குடும்பங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வரிசையில் உள்ள மற்ற பறவைகள் இதில் வகைப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமானது, அவற்றை எங்காவது ஓர் இடத்தில் வகைப்படுத்த வேண்டும் என்பதேயாகும். இதன் காரணமாக விரிவுபடுத்தப்பட்ட குருயிபார்மஸ் வரிசை உயிரினங்கள் தங்களுக்கென்று ஒரு தனித்துவமான கிளைப்பாட்டியலை கொண்டிருக்கவில்லை. உசாத்துணை
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia