நிக்கல்(II) சிடீயரேட்டு (Nickel(II) stearate) C36H70NiO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[1][2] ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என பாதரசம்(II) சிடீயரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[3] உள்ளிழுத்தல், உட்செலுத்துதல் மற்றும் தோல் உறிஞ்சுதல் ஆகியன நேரிட்டால் இச்சேர்மம் மிகவும் நச்சுத்தன்மையுடையது.[4]
தயாரிப்பு
நிக்கல்(II) குளோரைடுடன் சோடியம் சிடீயரேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்யும்போது பரிமாற்ற வினையில் நிக்கல்(II) சிடீயரேட்டு உருவாகிறது.