நிக்கல்(II) அயோடைடு(Nickel(II) iodide) என்பது NiI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல்சேர்மமாகும். இணைக்காந்தமான இச்சேர்மம் கருப்பு நிறத்துடன் காணப்படுகிறது. தண்ணீரில் எளிதில் கரைந்து நீரணைவுச் சேர்மங்களின் நீலப்-பச்சை நிறக் கரைசலைக் கொடுக்கிறது[1]. இந்நிறம் குறிப்பாக நீரேற்றம் பெற்ற நிக்கல்(II) சேர்மங்களுக்கு உரியது ஆகும். ஓரியல்பு வினையூக்கியாக சில பயன்களை இச்சேர்மம் கொண்டுள்ளது.
அமைப்பு மற்றும் தயாரிப்பு
நீரற்ற நிக்கல்(II) அயோடைடு CdCl2 சேர்மத்தின் தலைமைப்பண்பு கூறுகளுடன் படிகமாகிறது. ஒவ்வொரு நிக்கல்(II) மையமும் எண்முக ஒருங்கிணைவு வடிவத் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.
ஐந்து நீரேற்றை நீர்நீக்கம் செய்து NiI2 தயாரிக்கப்படுகிறது[2].
சில தொழிற்துறை பயன்களையும் நிக்கல்(II) அயோடைடு கொண்டுள்ளது. கார்பனைலேற்ற வினைகளில் வினையூக்கியாக இது செயலாற்றுகிறது[3] . கரிமத் தொகுப்புவினைகள் சிலவற்றில் பொருத்தமான வினையாக்கியாக, குறிப்பாக சமாரியம்(II) அயோடைடுடன் இணைந்துச் செயல்படுகிறது[4].
மேற்கோள்கள்
↑Lide, D. R., ed. (2005). CRC Handbook of Chemistry and Physics (86th ed.). Boca Raton (FL): CRC Press. ISBN0-8493-0486-5.
↑Laird G. L. Ward, "Anhydrous Nickel (II) Halides and their Tetrakis(Ethanol) and 1,2-Dimethoxyethane Complexes" Inorganic Syntheses, 1972, Volume 13, Pages: 154–164, 2007. எஆசு:10.1002/9780470132449.ch30
↑W. Bertleff, M. Roeper, X. Sava, "Carbonylation" in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH: Weinheim, 2003. எஆசு:10.1002/14356007.a05_217.
↑Shinichi Saito, Nickel(II) Iodide" in Encyclopedia of Reagents for Organic Synthesis, John Wiley & Sons, 2008. எஆசு:10.1002/047084289X.rn00843. Article Online Posting Date: March 14, 2008.