(XeF5)2NiF6 சேர்மத்துடன் ஆர்சனிக்கு பெண்டாபுளோரைடு (AsF5) அல்லது பொட்டாசியம் அறுபுளோரோநிக்கலேட்டு(IV) சேர்மத்துடன் போரான் முப்புளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் நிக்கல் டெட்ராபுளோரைடு உருவாகிறது.[3][4]
இயற்பியல் பண்புகள்
நிக்கல் டெட்ராபுளோரைடு ஒரு பழுப்பு நிற திடப்பொருளாக உருவாகிறது. NiF3 ஐ உருவாக்குவதற்கு –65° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் F2 இழந்து நிலைப்புத்தன்மையற்றதாகி NiF3 சேர்மத்தை கொடுக்கிறது.[3]
வேதிப் பண்புகள்
நிக்கல் டெட்ராபுளோரைடு மிகவும் வலிமையான ஓர் ஆக்சிசனேற்றியாகும். நீரற்ற HF இல் லூயிசு அமிலங்களின் முன்னிலையில் ஆக்சிசனேற்ற பண்புகள் மேம்படுத்தப்படுகின்றன. ஆக்சிசனேற்ற சக்தியின் அடிப்படையில், இது கிரிப்டான் இருபுளோரைடுடன் ஒப்பிடத்தக்கதாக உள்ளது. புரோமின் பெண்டாபுளோரைடை அறுபுளோரோபுரோம்(VII) நேர்மின் அயனியாகவும், பொட்டாசியம் அறுபுளோரோபிளாட்டினேட்டு(V) சேர்மத்தை பிளாட்டினம்(VI) புளோரைடாகவும் ஆக்சிசனேற்றம் செய்கிறது.[5]
நிக்கல் டெட்ராபுளோரைடு சேர்மம் நிலையற்ற கிரிப்டான் இருபுளோரைடுக்கு மாற்றாக கனிமத் தொகுப்பு வினைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது கிடைக்கக்கூடிய மற்றும் நிலையான பொட்டாசியம் அறுபுளோரோநிகெலேட்டு(IV) சேர்மத்திலிருந்து மிக எளிதாக ஒருங்கிணைக்கப்படுகிறது.