நிக்கல்(II) புரோமைடு
நிக்கல்(II)புரோமைடு (Nickel(II) bromide) என்பது NiBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஐதரோபுரோமிக் அமிலத்தித்தினுடைய நிக்கல் உப்பான இச்சேர்மம் ஒரு வீரியம் குறைந்த ஆக்சிசன் ஒடுக்கியாகும். நிக்கல், நிக்கல்(II) ஆக்சைடு நிக்கல்(II) கார்பனேட்டு அல்லது நிக்கல்(II) ஐதராக்சைடு முதலான பொருட்களில் ஒன்றுடன் ஐதரோ புரோமிக் அமிலத்தைச் சேர்த்து வினைப்படுத்தினால் நிக்கல்(II)புரோமைடைத் தயாரிக்க முடியும். நிக்கலுடன் புரோமினைச் சேர்த்து வினைப்படுத்துவதாலும் இதைத் தயாரிக்கலாம மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடன் நீருறிஞ்சியாக நிக்கல்(II)புரோமைடு காணப்படுகிறது. நீர் மற்றும் எத்தனாலில் கரைகிறது. குறிப்பாக நிக்கல்(II) சேர்மங்கள் தண்ணீரில் கரையும் பொழுது, நீலப்பச்சை நிற கரைசல்களைத் தருகிறது. காரங்களுடன் வினைபுரிந்து நிக்கல்(II) ஐதராக்சைடைத் தருகிறது. புரோமைடு அயனிகளை வழங்கும் மூலமாக இது பயன்படுத்தப்படுகிறத மற்ற நிக்கல் சேர்மங்களைப் போல நிக்கல்(II)புரோமைடும் நச்சுத் தன்மை வாய்ந்ததாகும். இச்சேர்மம் ஒரு புற்று நோயாக்கியாகவும் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தோலில் படும்பொழுது தோல் வியாதிகளை ஏற்படுத்தக்கூடிய சேர்மமாக இருக்கிறது. புரோமைடு அயனியும் ஒரு மிதமான நச்சுத்தன்மை மிக்கதாகும். மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia