நெப்டியூனியம் டெட்ராபுரோமைடு Neptunium tetrabromide
பெயர்கள்
வேறு பெயர்கள்
நெப்டியூனியம்(IV) புரோமைடு
இனங்காட்டிகள்
15608-32-9 Y
InChI=1S/4BrH.Np/h4*1H;/q;;;;+4/p-4 Key: HUNTZSUKDFZQIP-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள்
Image
[Np+4].[Br-].[Br-].[Br-].[Br-]
பண்புகள்
Br 4 Np
வாய்ப்பாட்டு எடை
556.62 g·mol−1
தோற்றம்
செம்பழுப்பு நிறப் படிகங்கள்
அடர்த்தி
5.5 கி/செ.மீ3
உருகுநிலை
464 °C (867 °F; 737 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
நெப்டியூனியம் டெட்ராபுரோமைடு (Neptunium tetrabromide ) என்பது NpBr4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நெப்டியூனியமும் புரோமினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[ 1] [ 2] [ 3] [ 4]
தயாரிப்பு
புரோமினுடன் உலோக நெப்டியூனியத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் நெப்டியூனியம் டெட்ராபுரோமைடு உருவாகிறது.
Np + 2Br2 → NpBr4
நெப்டியூனியம்(IV) ஆக்சைடு சேர்மத்துடன் அலுமினியம் புரோமைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் நெப்டியூனியம் டெட்ராபுரோமைடு உருவாகும்:[ 5] [ 6]
3NpO2 + 4AlBr3 -> 3NpBr4 + 2Al2 O3
இயற்பியல் பண்புகள்
நெப்டியூனியம் டெட்ராபுரோமைடு செம்-பழுப்பு நிற நீருறிஞ்சும் படிகங்களாக உருவாகிறது. P 2/c என்ற இடக்குழுவில்[ 7] [ 8] a = 1.089 நானோமீட்டர், b = 0.874 நானோமீட்டர், c = 0.705 நானோமீட்டர், β = 95.19°, Z = 4. என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் ஒற்றைச் சரிவச்சு படிக அமைப்பில் இது படிகமாகிறது.
வேதியியல் பண்புகள்
நெப்டியூனியம் டெட்ராபுரோமைடை நன்றாகச் சூடுபடுத்தினால் சிதைவடைந்து நெப்டியூனியம் முப்புரோமைடு உருவாகிறது.
2NpBr4 → 2NpBr3 + Br2
ஆண்டிமனி(III) ஆக்சைடுடன் சேர்த்து கவனமாக ஆக்சிசனேற்றம் செய்தால் நெப்டியூனியம் ஆக்சியிருபுரோமைடு உருவாகிறது:
NpBr4 + Sb2O3 → NpOBr2 + 2SbOBr
மேற்கோள்கள்
↑ "WebElements Periodic Table » Neptunium » neptunium tetrabromide" . webelements.com. Retrieved 2 April 2024 .
↑ Stevens, J. L.; Jones, E. R.; Karraker, D. G. (15 February 1976). "Mössbauer spectra and magnetic susceptibility of neptunium tetrabromide" . The Journal of Chemical Physics 64 (4): 1492–1494. doi :10.1063/1.432366 . Bibcode: 1976JChPh..64.1492S . https://pubs.aip.org/aip/jcp/article-abstract/64/4/1492/785421/Mossbauer-spectra-and-magnetic-susceptibility-of?redirectedFrom=PDF . பார்த்த நாள்: 2 April 2024 .
↑ Brown, D.; Hill, J.; Rickard, C. E. F. (1 January 1970). "Preparation of actinide bromides and bromo-complexes by use of liquid boron tribromide or liquid bromine" (in en). Journal of the Chemical Society A: Inorganic, Physical, Theoretical : 476–480. doi :10.1039/J19700000476 . பன்னாட்டுத் தர தொடர் எண் :0022-4944 . https://pubs.rsc.org/en/content/articlelanding/1970/j1/j19700000476 . பார்த்த நாள்: 2 April 2024 .
↑ Yaws, Carl L. (6 January 2015). The Yaws Handbook of Physical Properties for Hydrocarbons and Chemicals: Physical Properties for More Than 54,000 Organic and Inorganic Chemical Compounds, Coverage for C1 to C100 Organics and Ac to Zr Inorganics (in ஆங்கிலம்). Gulf Professional Publishing . p. 740. ISBN 978-0-12-801146-1 . Retrieved 2 April 2024 .
↑ Fried, S. (1947). The Basic Dry Chemistry of Neptunium (in ஆங்கிலம்). Atomic Energy Commission. p. 10. Retrieved 2 April 2024 .
↑ Abstracts of Declassified Documents (in ஆங்கிலம்). Technical Information Division, Oak Ridge Directed Operations. 1947. p. 740. Retrieved 2 April 2024 .
↑
↑ Kirk-Othmer Concise Encyclopedia of Chemical Technology, 2 Volume Set (in ஆங்கிலம்). John Wiley & Sons . 16 July 2007. p. 47. ISBN 978-0-470-04748-4 . Retrieved 2 April 2024 .
Np(III) நெப்டியூனியம் (IV) Np(V) நெப்டியூனியம் (VI)