நெப்டியூனியம்(V) ஆக்சைடு
நெப்டியூனியம்(V) ஆக்சைடு (Neptunium(V) oxide) என்பது Np2O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] நெப்டியூனியம் பெண்டாக்சைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. சாத்தியமுள்ள இரண்டு நெப்டியூனியம் ஆக்சைடுகளில் இதுவும் ஒன்றாகும். நெப்டியூனியம்(IV) ஆக்சைடு மற்றொரு நெப்டியூனியம் ஆக்சைடாகும்.[3] வரலாறுநெப்டியூனியம்(V) ஆக்சைடு முதன்முதலில் 1963 ஆம் ஆண்டு நெப்டியூனைல்(V) அயனிகளைக் கொண்ட உருகிய இலித்தியம் பெர்குளோரேட்டு வழியாக ஓசோனைச் செலுத்தி, விளைபொருளை வீழ்படிவாக்குவதன் மூலம் தயாரிக்கப்பட்டது.[4] தயாரிப்புநெப்டியூனியம்(VI) ஆக்சைடு (NpO3·xH2O), நெப்டியூனைல்(V) ஐதராக்சைடு (NpO2OH), நெப்டியூனைல்(VI) ஐதராக்சைடு (NpO2(OH)2), நெப்டியூனியம்(V) நைட்ரேட்டுகள் (NpO(NO3)3 அல்லது NpO2NO3) போன்ற நெப்டியூனியத்தின் பிற சேர்மங்களை அதிக வெப்பநிலையில் சுட்டு நெப்டியூனியம்(V) ஆக்சைடைத் தயாரிக்கலாம்.[5][6] கரைசலிலுள்ள நெப்டியூனைல் அயனிகளை வீழ்படிவாக்குவதன் மூலமும் இதைத் தயாரிக்கலாம்.:[2][6]
வினைகள்நெப்டியூனியம்(V) ஆக்சைடு 700 கெல்வின் வெப்பநிலையில் சிதைவடைந்து, நெப்டியூனியம்(IV) ஆக்சைடு மற்றும் ஆக்சிசன் வாயுவை உருவாக்குகிறது:[3][5]
நெப்டியூனைல்(VI) ஐதராக்சைடை அதிக வெப்பநிலையில் சுட்டு உற்பத்தி செய்யப்படும் நெப்டியூனியம்(V) ஆக்சைடு சேர்மம் NpO2 சேர்மத்தை அடைவதற்கு முன்பு ஓர் இடைநிலை கட்டமான Np4O9 வழியாகச் செல்கிறது.[5] கட்டமைப்பு![]() நெப்டியூனியம்(V) ஆக்சைடு ஓர் அடுக்கு அமைப்பை ஏற்றுக்கொள்கிறது. வெவ்வேறு அடுக்குகளில் உள்ள தொடர்புடைய நெப்டியூனியம் அணுக்கள் ஆக்சிசன் அணுக்களால் பாலமாகி, நெப்டியூனைல் நேர்மின் அயனிகளின் சங்கிலிகளை உருவாக்குகின்றன. ஒவ்வொரு அடுக்குக்குள்ளும், நெப்டியூனைல் நேர்மின் அயனிகள் ஆக்சிசன் அணுக்களால் இணைக்கப்பட்டுள்ளன.[2] நெப்டியூனியம்(V) ஆக்சைடின் படிக அமைப்பு மூன்று தனித்துவமான நெப்டியூனியம் தளங்களைக் கொண்டுள்ளது. இரண்டு தளங்கள் ஐங்கோண இருபிரமிடல் ஒருங்கிணைப்பு வடிவவியலைக் கொண்டுள்ளன. மற்றொன்று நாற்கோண இருபிரமிடல் ஒருங்கிணைப்பு வடிவவியலைக் கொண்டுள்ளது.[2] நெப்டியூனியம்(V) ஆக்சைடு படிகங்கள் ஒற்றைச் சாய்வு கொண்டவையாகும். P2/c என்ற இடக்குழுவும், ஒர் அலகு செல்லிற்கு நான்கு வாய்ப்பாட்டு அலகுகளும் a=8.17Å, b=6.58Å, c=9.313Å, மற்றும் β=116.09°. என்ற அணிக்கோவை அளவுருக்களும் கட்டமைப்பில் உள்ளன. சேர்மத்தின் அடர்த்தி 8.18 கிராம்/செ.மீ3 ஆகும்.[2] பிற பண்புகள்நெப்டியூனியம்(V) ஆக்சைடு 22 கெல்வின் வெப்பநிலையில் எதிர்பெர்ரோ காந்த வரிசைப்படுத்தலுக்கு உட்படுகிறது.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia