படர்ந்தபுளி ஊராட்சி
படர்ந்தபுளி வாலிபால் விளையாட்டிற்கு பெயர் பெற்ற இடமாகும். லியா வாலிபால் கிளப், தமிழ்நாட்டில் அறியப்பட்ட கிளப்புகளில் ஒன்றாகும். படர்ந்தபுளி வாலிபால் மைதானத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிப்பறைக் கூடங்கள், மேடை மற்றும் மின்னொளி விளக்குகள் போன்ற அனைத்து தேவையான வசதிகளும் உள்ளன. விளாத்திக்குளம், எட்டையபுரம்,கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு வீரர்கள் படர்ந்தபுளிக்கு பயிற்சி எடுக்கவும் விளையாடவும் வருகிறார்கள். அடிப்படை வசதிகள்தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
படர்ந்தபுளியில் அரசு ஆரம்பப்பள்ளியும், அரசு உயர்நிலைப் பள்ளியும் உள்ளன. அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் மேல் படிப்பிற்காக படர்ந்தபுளி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வருகிறார்கள். சிற்றூர்கள்இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:
சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia