இராமசாமி பரமேஸ்வரன்
மேஜர் இராமசாமி பரமேஸ்வரன் (Ramaswamy Parameswaran), பரம் வீர் சக்கரம் (13 செப்டம்பர் 1946, மும்பை – 25 நவம்பர் 1987) இந்தியாவின் மும்பை நகரத்தில் 1946-இல் பிறந்த பரமேஸ்வரனின் தந்தை பெயர் இராமசாமி ஆகும். இவர் இந்திய அரசு நடத்தும் இராணுவ அதிகாரிகளுக்கான நுழைவுத் தேர்வில் (Short Service Commission) வென்று, 16 ஜனவரி 1972 அன்று இந்திய இராணுவத்தின் மகர் ரெஜிமெண்டின் 15-வது பட்டாலியனில் இராணுவ அதிகாரியாக பணியில் சேர்ந்தார். ஈழப் போரின் போது இந்திய அமைதி காக்கும் படை இணைந்த பரமேஸ்வரன் பவான் நடவடிக்கையின் பல வீரதீர சாகசங்கள் செய்து, 25 நவம்பர் 1987 அன்று வீரமரணம் அடைந்தார். மேஜர் பரமேஸ்வரனின் இறப்பிறகுப் பின்னர், பரமேஸ்வரனின் வீரச் செயல்களைப் பாராட்டி, இந்தியக் குடியரசுத் தலைவர், மேஜர் பரமேஸ்வரனின் குடும்பத்தினர் மூலம் 1988-ஆம் ஆண்டில் பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.[1][2] மரபுரிமைப் பேறுகள![]()
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia