பள்ளிக்கரணை
பள்ளிக்கரணை (ஆங்கிலம்:Pallikaranai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமம் ஆகும். முன்னர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு பேரூராட்சியாக இருந்த இப்பகுதி, ஜூலை 2011 முதல் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. பள்ளிக்கரணை சென்னை மாநகராட்சியின் 189-ஆவது வார்டு, 14-ஆவது மண்டலத்தில் உள்ளது. 2012 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய சொத்து ஆலோசகர் "நைட் பிராங்கின்" அறிக்கையின் படி, இந்த பள்ளிக்கரணை பகுதிகள் இந்தியாவின் முதலீட்டிற்கான 13 முக்கிய குடியிருப்பு இடங்களில் 11வது பெரிய இடமாக திகழ்ந்தது. குடியிருப்புப் பேரிடங்களில் இருந்து முதலீட்டாளர்களின் பார்வையில், 2012 முதல் 2017 காலக்கட்டத்தில் வீட்டு விலை மதிப்பு 93 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.[4] இயற்கை வளம்இப்பகுதி வங்கக்கடலை ஒட்டியுள்ளது. இங்கு சதுப்புநிலக்காடுகள் காணப்படுகின்றன. இப்பகுதியின் அலையாத்தித் தாவரங்கள் உயிரியல் சிறப்பு வாய்ந்தவை. இக்காடுகளை பல பறவைகள், நிலநீர் வாழிகள் போன்றவை வாழிடமாகக் கொண்டுள்ளன. இதனையும் காண்கஆதாரங்கள்
அமைவிடம்மேலும் பார்க்க
|
Portal di Ensiklopedia Dunia