மேடவாக்கம்மேடவாக்கம் (ஆங்கிலம் :Medavakkam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டத்தில் இருக்கும் வருவாய் கிராமம் ஆகும். தற்போது இப்பகுதி பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்னர் இது காஞ்சிபுரம் மாவட்டத்தின், சோழிங்கநல்லூர் வட்டத்தின் பகுதியாக இருந்தது. இப்பொழுது இது செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டத்தில் மாற்றப்பட்டுள்ளது. இது வேளச்சேரி, சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், சேலையூர், கோவிலாங்சேரி, கீழ்க்கட்டளை, தாம்பரம் மற்றும் சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி. ஓ.எம்.ஆர் சாலை மற்றும் "மேடவாக்கம் - சோழிங்கநல்லூர்" சாலையில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு மிக அருகில் உள்ளமையால், மேடவாக்கம் வளர்ந்து வரும் ஒரு குடியுருப்புப் பகுதியாக மாறி வருகிறது . அருகில் உள்ள கல்லூரிகள்
அருகில் உள்ள மருத்துவமனைகள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia