2011-க்கு முன்னர் சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்வதற்கும் முன், 174 km2 (67 sq mi) பரப்பளவு கொண்டிருந்தது; சென்னை மாநகராட்சியுடன் 42 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்த பின்னர் பெருநகர சென்னை மாநகராட்சியின் பரப்பளவு 426 km2 (164 sq mi) ஆக இரட்டிப்பு ஆனது.
விரிவாக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி 4.41 மில்லியன் வாக்காளர்களுடன், 15 மண்டலங்களும், 200 வார்டுகளையும் கொண்டுள்ளது.[6]பெருநகர சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளை 93 வார்டுகளிலும், பழைய சென்னை மாநகராட்சியின் 155 வார்டுகளை, புதிய 107 வார்டுகளில் நிர்வகிக்கப்படுகிறது.[7] செப்டம்பர் 2011-ன் நிலவரப்படி பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில், 26 வார்டுகள் பட்டியல் சமூகத்திற்கும், பட்டியல் பழங்குடி மக்களுக்கும், 58 வார்டுகள மகளிருக்கும் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.[7]
"Newly formed zones"(PDF). Chennai Corporation. Archived from the original(PDF) on 15 டிசம்பர் 2012. Retrieved 31 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)