பிந்தாங் மலைத்தொடர்
பிந்தாங் மலைத்தொடர் (மலாய்: Banjaran Bintang; ஆங்கிலம்: Bintang Mountains சீனம்: 冕登山脉) என்பது மலேசியாவின் கெடா; பேராக் மாநிலங்களில் அமைந்துள்ள ஒரு மலைத்தொடராகும். தாய்லாந்து நாட்டின் தெனாசிரிம் மலைத்தொடரின் (Tenasserim Hills) ஒரு பகுதியாகவும் உள்ளது.[2] இந்த மலைத்தொடர் வடக்கே தாய்லாந்தின் தென்பகுதியில் உள்ள யாலா மாநிலத்தில் (Yala Province) தொடங்கி, கெடா-பேராக் மாநிலங்களின் எல்லைகளைத் தாண்டி, பேராக் மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள மஞ்சோங் மாவட்டத்தின் (Manjung District) புருவாஸ் (Beruas) நகரத்திற்கு தெற்கில் முடிவடைகிறது.[3] பொதுபேராக் மாநிலத்தைப் பொறுத்த வரையில், கிழக்கில் கோலாகங்சார் மாவட்டம் (Kuala Kangsar District) மற்றும் உலு பேராக் மாவட்டம் (Hulu Perak District); மேற்கில் லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம் (Larut, Matang and Selama District) ஆகிய மாவட்டங்களுக்கு இடையே ஓர் இயற்கையான எல்லையாக இந்த மலைத்தொடர் அமைகிறது.[4] இந்த மலைத்தொடர் தீபகற்ப மலேசியாவின் முக்கிய மலைத்தொடரான தித்திவாங்சா மலைத்தொடரை (Titiwangsa Mountains) அதன் கிழக்கே எல்லையாகக் கொண்டுள்ளது. இதுவே கெடா மாநிலத்தில் மிக உயர்ந்த மலைத் தொடராக அறியப்படுகிறது. முக்கிய மலைச் சிகரங்கள்பிந்தாங் மலைத்தொடரில் உள்ள பிந்தாங் மலை, கடல் மட்டத்தில் இருந்து 1,882 மீட்டர் (6,174 அடி) உயரத்தில் உள்ள மிக உயர்ந்த மலையாகும். இந்த மலைத்தொடரில் பல முக்கிய மலைச் சிகரங்களும் ஒரு பகுதியாக விளங்குகின்றன.
பிந்தாங் மலைத்தொடர் காட்சியகம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia