உலு பேராக் மாவட்டம்
உலு பேராக் (Daerah Hulu Perak) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். அந்த மாநிலத்திலேயே பெரிய மாவட்டமும் ஆகும். இந்த மாவட்டத்தின் கிழக்கே கிளாந்தான் மாநிலம்; மேற்கில் கெடா மாநிலம்; தெற்கே கோலாகங்சார் மாவட்டம், தென்மேற்கில் லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம்; ஆகிய பகுதிகள் உள்ளன. தவிர தாய்லாந்தின் பெத்தோங் மாவட்டத்தின் ஒரு பகுதியை எல்லையாகக் கொண்டு உள்ளது. மாவட்டத்தின் மிக உயரமான இடம் தித்திவாங்சா மலைகளில் அமைந்துள்ளது. தாய்லாந்து / மலேசிய எல்லைக்கும்; தெமாங்கூர் (Temenggor) ஏரிக்கும் அருகில் 1,533 மீட்டர் உயரமுள்ள உலு திதி பாசா சிகரம் தான் அந்த உயரமான இடம்.[1] வரலாறு19-ஆம் நூற்றாண்டு வரை, சிறிது காலத்திற்கு இந்த மாவட்டத்தின் ஒரு பகுதி பழைய சயாம் நாட்டு ஆட்சியின் கீழ் இருந்தது. சயாம் என்பது தற்சமயம் தாய்லாந்து என்று அழைக்கப் படுகிறது. சயாம் கட்டுப்பாட்டின் கீழ் அப்போது இருந்த பகுதிகளில் இன்றைய கிரிக்; பெங்காலான் ஊலு (குரோ), கெருனை (Kerunai); பெலும் காடுகள்; மற்றும் தெமாங்கூர் ஏரிகள் போன்ற இடங்கள் அடங்கும். அன்றைய காலக்கட்டத்தில் அங்கு ரெமான் (Reman) எனும் மலாய் சிற்றரசு இருந்தது. ரெமான் சிற்றரசின் தலைநகரம் பெங்காலான் ஊலு எனும் இடத்திற்கு அருகில் அமைந்து இருந்தது.[2] தாய்லாந்து - பேராக் எல்லை ஒப்பந்தம்பிரித்தானியர்களின் பாதுகாக்கப்பட்ட மாநிலமாக பேராக் மாறியதும், 1882-ஆம் ஆண்டில் ஓர் எல்லை ஒப்பந்தம் கையெழுத்தானது. கிரிக் நகரில் இருந்து 5 கி.மீ தெற்கே இருக்கும் புக்கிட் நாஷா எனும் இடத்தில், பேராக் மாநிலத்திற்கும் தாய்லாந்து நாட்டிற்கும் இடையிலான அந்த எல்லை ஒப்பந்தம் வரையப் பட்டது. 1899-ஆம் ஆண்டில் கிரிக் நகரத்தையும்; அதைச் சுற்றியுள்ள இடங்களையும் பேராக் மாநிலத்திற்குச் சயாம் நாடு (தாய்லாந்து) மாற்றிக் கொடுத்தது. அப்போது பேராக் மாநிலம், மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் (Federated Malay States) கீழ் இருந்தன. இன்றைய மலேசியா-தாய்லாந்து எல்லை, 1909-ஆம் ஆண்டில் இரு நாடுகளும் இடையே உறுதி செய்யப்பட்டது.[3] நிர்வாகப் பிரிவுகள்![]() உலு பேராக் மாவட்டம் 10 துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. மூன்று மாவட்ட மன்றங்கள் உள்ளன. அவையாவன:[4] பெங்காலான் உலு மாவட்ட மன்றத்தின் (Pengkalan Hulu District Council) கீழ்:
கிரிக் மாவட்ட மன்றத்தின் (Gerik District Council) கீழ்:
லெங்கோங் மாவட்ட மன்றத்தின் (Lenggong District Council) கீழ்:
மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்பின்வரும் உலு பேராக் மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் மலேசியா 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது.[5]
மலேசிய நாடாளுமன்றம்மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) உலு பேராக் மாவட்டத்தின் கிரிக் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்புல்லா ஒசுமான் (Hasbullah Osman) கடந்த 2020 நவம்பர் 16-ஆம் தேதி மாரடைப்பால் காலமானர். மலேசியாவில் அவசரகாலம் நடைமுறையில் இருப்பதால் கிரிக் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.[6]
பேராக் மாநிலச் சட்டமன்றம்பேராக் மாநிலச் சட்டமன்றத்தில் உலு பேராக் மாவட்டப் பிரதிநிதிகள்; (2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்):
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia