பெர்ணம் ஆறு
பெர்ணம் ஆறு அல்லது பெர்னாம் ஆறு என்பது (மலாய்: Sungai Bernam; ஆங்கிலம்: Bernam River); மலேசியாவின் பேராக் சிலாங்கூர் மாநிலங்களின் எல்லையில் உருவாகும் ஆறு. ஏறக்குறைய 150 கி.மீ. நீளம் கொண்டது. இந்த ஆறு, தஞ்சோங் மாலிம், சிலிம் ரிவர், சபாக் பெர்ணம், பாகன் டத்தோ போன்ற முக்கியமான நகரங்களைக் கடந்து மலாக்கா நீரிணையை அடைகிறது.[1] இந்த ஆற்றை பெர்னாம் ஆறு என்றும் அழைப்பது உண்டு. ஆனாலும், பெர்ணம் ஆறு என்று மலேசிய ஊடகங்களில் பொதுவாகப் பயன்படுத்தப் படுகிறது. பெர்ணம் ஆறு, தஞ்சோங் மாலிம் நகரை இரு பகுதிகளாகப் பிரிக்கின்றது. வடக்குப் பகுதி பேராக் மாநிலத்தைச் சேர்ந்தது. தென் பகுதி சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்தது. பொதுபெர்ணம் ஆறு, கிழக்கில் தித்திவாங்சா மலைத்தொடரில் உள்ள லியாங் திமூர் மலையில் (Mount Liang Timur) உற்பத்தியாகிறது. அங்கு இருந்து பல நகரங்களைக் கடந்து வந்து மேற்கில் மலாக்கா நீரிணையில் பாய்கிறது. லியாங் திமூர் மலையின் சிகரம் பகாங், பேராக் மற்றும் சிலாங்கூர் மாநிலங்களின் எல்லைகள் சந்திக்கும் ஒரு முக்கோணத்தைக் குறிக்கிறது. சதுப்பு நிலங்கள்பெர்ணம் ஆற்றின் கிழக்குப் பகுதிகளில் எண்ணெய்ப் பனை மற்றும் ரப்பர் தோட்டங்கள் உருவாக்குவதற்கு ஏற்ற பகுதிகளாக உள்ளன. அதே நேரத்தில் மேற்குப் பகுதிகளில் சதுப்பு நிலங்கள் நிரம்பி உள்ளன. பல இடங்களில் சதுப்பு நிலங்கள் மீட்டு எடுக்கப்பட்டு வடிகால்கள் அமைக்கப் பட்டதால் வறண்டு விட்டன. சில இடங்கள் நெல் வயல்களாக மாற்றப்பட்டு உள்ளன. அகழ்வாராய்ச்சிகள்தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பெர்ணம் ஆற்றங் கரைகளில் பல தொல்பொருள் தளங்களைக் கண்டுபிடித்து உள்ளனர். அங்கு பண்டைய காலத்துக் கலைப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. பல்வேறு உள்ளூர்ப் பல்கலைக்கழகங்கள் மற்றும் சுல்தான் ஆலாம் ஷா அருங்காட்சியகம் (Muzium Sultan Alam Shah) போன்ற அமைப்புகள், அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. பெர்ணம் ஆற்றை ஒட்டிய நகரங்கள்மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia