பிந்த்ரா தாலுகா
பிந்த்ரா தாலுகா (Pindra tehsil) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பூர்வாஞ்சல் பிரதேசத்தில் அமைந்த வாரணாசி மாவட்டத்தில் உள்ள மூன்று தாலுகாக்களில் பிந்திரா தாலுகாவும் ஒன்றாகும். இது வாரணாசி நகரத்திலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[1] இத்தாலுகா 1 கணக்கெடுப்பில் உள்ள ஊர் மற்றும் 423 கிராமங்களையும் கொண்டுள்ளது.[2][3][4][5] மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இத்தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 6,27,298 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 972 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14% ஆகும். சராசரி எழுத்தறிவு 73.84% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 117,597 மற்றும் 4,605 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 93.08%, இசுலாமியர்கள் 6.65% மற்றும் பிறர் 0.09% ஆக உள்ளனர்.[6] போக்குவரத்துஇத்தாலுகாவின் பபாட்பூரில் லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. [7][1]லக்னோ - வாரணாசி வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை இத்தாலுகா வழியாகச் செல்கிறது. இதனையும் காண்கதட்ப வெப்பம்
போக்குவரத்துஇத்தாலுகாவின் பபாட்பூரில் லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. [7][1]லக்னோ - வாரணாசி வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை இத்தாலுகா வழியாகச் செல்கிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia