ராம்நகர், வாராணாசி மாவட்டம்
ராம்நகர் (Ramnagar) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பூர்வாஞ்சல் பிரதேசத்தில் உள்ள வாரணாசி மாவட்டம், வாரணாசி தாலுகாவில் அமைந்த நகராட்சி மன்றம் ஆகும். இது வாரணாசி நகரத்திற்கு தென்கிழக்கில் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரத்தில் காசி இராச்சியத்தின் ராம்நகர் கோட்டை அமைந்துள்ளது.[2] ![]() வரலாறுஇராம்நகரத்தில் கங்கை ஆற்றின் கரையில் ராம்நகர் கோட்டையை மணற்கற்களால் 18-ஆம் நூற்றாண்டில் முகலாய கட்டிடக் கலை நயத்தில் நிறுவியவர் காசி இராச்சியத்தின் இறுதி மன்னர் விபுதி நாராயண சிங் ஆவார். இராமலீலைஆண்டுதோறும் காசி மன்னர் பரம்பரையினர் இராம்நகரில் நடத்தும் இராமலீலையின் போது ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வர்.[3] மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 3.624 எக்டேர் சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 7729 குடும்பங்களும், 25 வார்டுகளும் கொண்ட இராம்நகர் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 49132 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 26071 மற்றும் 23061 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 885 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 6,090 ஆகும். சராசரி எழுத்தறிவு 79.92%, ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 5,340 மற்றும் 191 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 75.99%, இசுலாமியர்கள் 23.41%, சீக்கியர்கள் 0.43%, கிறித்துவர்கள் 0.1% மற்றும் பிறர் 0.06% ஆக உள்ளனர்.[4][5] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia