பிராமியம் (யோகம்)

இந்திய சோதிடத்தில் பிராமியம் அல்லது பிரமம் என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் இருபத்தைந்தாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 320° 00' தொடக்கம் 333° 20' வரை "பிராமியம்" யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "பிராமியம்" ஆகும். இந்த நேரத்தில் பிறக்கும் ஒருவர் "பிராமியம்" யோகத்தைத் தனது பிறந்த யோகமாகக் கொண்டிருப்பார்.

சமசுக்கிருத மொழியில் ப்ராஹ்ம (Brāhma) என்பது தெய்வீக மூலம், அண்டத்தின் சாரம் போன்ற பொருள்களைத் தருவது. மங்கலமான யோகம் எனச் சோதிட நூல்கள் குறிப்பிடும் யோகங்களுள் இதுவும் ஒன்று. இதன் ஆட்சிக் கோள் செவ்வாய். ஆட்சித் தேவதை அசுவினி குமாரர்.[1]

குறிப்புகள்

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya