கர்ப்போட்டம்

கர்ப்போட்டம் என்பது மார்கழி மாதத்தில் சூரியன் இராசிச் சக்கரத்தில் பூராடம் நட்சத்திரத்தை கடக்கும் காலம் ஆகும்.மேலும் இக்காலகட்டத்தில் 15 நாட்கள் வானம் மேகமூட்டத்துடனும் வெயில் இல்லாமலும் இருந்து சிறு தூறல் மட்டும் பொழிந்தால் வரும் வருடத்தில் நல்ல மழை பொழிவு உண்டாகும் என்று முன்னோர்கள் கூற்று.மாறாக வெயில் அடித்தாலோ அல்லது அக்காலகட்டத்தில் நல்ல மழை பொழிந்துவிட்டால் வரும் வருடம் மழை பொய்த்து விடும் என்று நம்பிக்கை [1]

சோதிடம்

கர்ப்போட்டம் காலம் என்னும் இந்த 14 நாட்களில் ஏற்படும் வானிலை மாற்றங்கள் மற்றும் சூரியனைக் கார்மேகங்கள் சூழ்ந்து மறைத்து இருந்தால் அதன் அடிப்படையில் வருங்காலத்தில் மழை இருப்பதாக நம்பப்படுகிறது.[2] இது சோதிடம் மற்றும் பஞ்சாங்கம் போன்றவற்றில் குறிப்பிடப்படும் ஒருவித நம்பிக்கை மட்டுமே. இதற்கு அறிவியல் ஆதாரமும் இல்லை.

பழந்தமிழ் பாடல்

தீயபூ ராடம் வெய்யோன் சேர்ந்திடு நாளில் வட்டம் தூயமந் தாரம்
தோன்றில் சுடரவன் ஆதி ரைக்கே
பாயுநாள் தொட்டு முன்பின் ஒருநாட்கும் பதினாலாக காயும்வேற்
கண்ணாய் சொல்லும் கார்மழை கர்ப்பம் தானே

மேற்கோள்கள்

  1. "பொருள் - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி". தமிழ் இணையக் கல்விக்கழகம். Archived from the original on 2016-03-07. Retrieved 8 சனவரி 2014.
  2. "மார்கழியில் ஆன்மிகமும், ஆரோக்கியமும்!". தினத்தந்தி. Retrieved 8 சனவரி 2014.


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya