வியாதிபாதம் (யோகம்)

இந்திய சோதிடத்தில் வியாதிபாதம் என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் பதினேழாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 213° 20' தொடக்கம் 226° 40' வரை "வியாதிபாதம்" யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "வியாதிபாதம்" ஆகும். இந்த நேரத்தில் பிறக்கும் ஒருவர் "வியாதிபாதம்" யோகத்தைத் தனது பிறந்த யோகமாகக் கொண்டிருப்பார்.

சமசுக்கிருத மொழியில் வ்யாதிபாத (Vyatipata) என்பது பேரழிவு என்னும் பொருள் அமைந்தது. எந்த நல்ல விடங்களைச் செய்வதற்கும் பொருத்தமற்றது எனச் சோதிட நூல்கள் குறிப்பிடும் யோகங்களுள் இதுவும் ஒன்று. இது மிக்கூடிய அளவு அமங்கலத் தன்மை கொண்டதாகக் கருதப்படுகின்றது. இதன் ஆட்சிக் கோள் இராகு. ஆட்சித் தேவதை உருத்திரன்.[1]

குறிப்புகள்

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya