பிரேம் சாகல்
கர்னல் பிரேம் குமார் சாகல் (Prem Sahgal) (25 மார்ச் 1917 - 17 அக்டோபர் 1992) இவர் பிரித்தானிய இந்திய ராணுவத்தின் அதிகாரியாக இருந்தார். யப்பானிய போர்க் கைதியாக ஆனபின், இவர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசிய இராணுவத்தில் ஒரு அதிகாரியாக பணியாற்றினார். மேலும் இந்தியாவில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக போராடுவதற்காக யப்பானியர்களால் வெளிப்படையாக நிறுத்தப்பட்டார். வாழ்க்கைஇவர், லாகூரின் மத்திய மாதிரி உயர்நிலைப் பள்ளியிலும், அரசு கல்லூரியிலும் கல்வி பயின்றார்.[1] 1936 ஆம் ஆண்டில், இராணுவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று தேராதூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமிக்குச் சென்றார்.[2] பிப்ரவரி 1, 1939 இல் வெளியிடப்பட்ட சிறப்புப் பட்டியலில் இரண்டாவது லெப்டினெண்டாக நியமிக்கப்பட்ட இவர், ஆர்கில் மற்றும் சதர்லேண்ட் ஹைலேண்டர்ஸின் 2 வது பட்டாலியனுடன் இணைக்கப்பட்டார். பின்னர் செகந்திராபாத்தில் நிறுத்தப்பட்டார். இவர் பிப்ரவரி 24, 1939 இல் அந்தப் படைப்பிரிவில் சேர்ந்தார் [3] ஒரு வருடம் அங்கேயே இருந்தார். அந்தப் பிரிவு ஆகத்து 1939 இல் சிங்கப்பூருக்கு போரை எதிர்பார்த்து அனுப்பப்பட்டது, ஆனால் இவர் மேற்கு யார்க்சயர் ரெஜிமென்ட்டின் 1 வது பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார், அது ஒரு அமைதி நிலையத்தில் இருந்தது.[4] ஒரு வருட சேவைக்குப் பிறகு, இவர் ஒரு மாத விடுப்பு எடுத்து தனது குடும்பத்துடன் லாகூரில் கழித்தார். இவர் திரும்பியதும், 10 வது பலூக் ரெஜிமென்ட்டின் 5 வது பட்டாலியனுக்கு அனுப்பப்பட்டார். வடமேற்கு எல்லையில் பெசாவரில் நிறுத்தப்பட்டார். தனது குடும்பத்துடன் ஒப்பீட்டளவில் நெருக்கமாகவும், போர்ச் சூழலிருந்து வெகு தொலைவிலும் இருந்தார்.[5] பின்னர், ஏப்ரல் 30, 1940 அன்று, இவர் லெப்டினன்ட் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.[6] அதிகாரிகள் இல்லாததால் 2/10 வது பலூச் ரெஜிமென்ட்டிற்கு மாற இவர் முன்வந்தார்.[7] அக்டோபர் 1940 இல், இவர் அப்போதைய ஐக்கிய மாகாணங்களில் தில்லிக்கு அருகிலுள்ள பரேலியில் 2 வது பட்டாலியனில் நியமிக்கப்பட்டார். அந்த படைப்பிரிவு அக்டோபர் 28, 1940 அன்று சிங்கப்பூருக்குப் பயணம் செய்து [8] 11 [7] 1940 நவம்பர் 11 அன்று தரையிறங்கியது.[7] திசம்பர் 1941 வாக்கில், இவர் பிரித்தானிய இந்திய இராணுவத்தின் 2/10 பலூச் ரெஜிமென்ட்டில் செயல் கலபதியாக பதவி உயர்வு பெற்றார். மேலும், மலாயாவில் ஜப்பானிய படைகளுக்கு எதிராக போராடினார். பிப்ரவரி 1942 இல் போர்க் கைதியாக ஆக்குவதற்கு முன்பு இவர் தனித்துவத்துடன் பணியாற்றினார்.[9] இந்திய தேசிய ராணுவம்ஒரு கைதியாக, காலனித்துவ பிரிட்டனின் நலன்களைக் காட்டிலும் இந்தியாவின் நலன்களுக்காக போராட இவர் அழைக்கப்பட்டார். பின்னர் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தார். பிரித்தானிய இந்திய ராணுவத்தில் தனது முன்னாள் சகாக்களுக்கு எதிராக ஆயுதங்களை எடுத்தார். இவர் 2 வது பிரிவின் தளபதியாக பணியாற்றினார். பிரித்தானிய படைகளிடம் சரணடைவதற்கு முன்பு பர்மா முற்றுகையின் பிற்பகுதியில் மெஸ்ஸெர்வியின் 17 வது இந்திய பிரிவுக்கு எதிராக போபாவில் 2 வது காலாட்படை படைப்பிரிவுக்கு தலைமை தாங்கினார். இந்திய தேசிய இராணுவத்துடனான தனது பணியின் போது, இவர் லட்சுமி சுவாமிநாதனுடன் திருமணம் செய்து கொண்டார். இந்திய தேசிய இராணுவம் பிரித்தானியப் படைகளிடம் சரணடைந்த பின்னர், அதன் அதிகாரிகளும், வீரர்களும் கைது செய்யப்பட்டனர். மேஜர் ஜெனரல் ஷா நவாஸ் கான், கர்னல் பிரேம் குமார், கர்னல் குர்பாக் சிங் தில்லான் ஆகியோர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அல்லாமா மஷ்ரிகியின் உத்தரவின் பேரில், கக்ஸர்கள் அவர்களின் விடுதலைக்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர். அவர்களின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. சரணடைந்த பின்னர், மூன்று சக அதிகாரிகளுடன் தேசத் துரோக வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் . இந்த வழக்கு நவம்பர் 1945 இல் நடைபெற்றது, அந்த நேரத்தில் இந்தியா தனது சுதந்திரத்தைப் பெறுவதற்கான விளிம்பில் இருந்தது. தில்லியில் உள்ள செங்கோட்டை விசாரணைக்கான இடமாக அமைக்கப்பட்டது. இந்த விசாரணை 1946 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் பிரபலமானது. மேலும், வரலாற்று புத்தகங்களில் இந்திய தேசிய இராணுவ வழக்குகள் என அறியப்படுகிறது. இவர் மீதான தேசத்துரோக குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் இவர் இராணுவத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். தனிப்பட்ட வாழ்க்கைமார்ச் 1947 இல் லாகூரில், இவர் அம்மு சுவாமிநாதனின் மகள் கேப்டன் லட்சுமி சுவாமிநாதனை மணந்தார். இவரது மனைவி இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் பிரிவின் தலைவராக இருந்தார். இவர்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றினர். லட்சுமி முன்பு டாடா விமான நிறுவனத்தில் பணிபுரியும் வணிக விமானியான பி.கே.என்.ராவ் என்பவரை மணந்திருந்தார். அந்த திருமணத்திலிருந்து வெளியேறிவிட்டார். ஆனால் விவாகரத்தை ஒருபோதும் பெறவில்லை. இவர்களுக்கு சுபாஷினி அலி மற்றும் அனிசா பூரி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். திரைப்படத் தயாரிப்பாளர் முசாபர் அலியை முன்னர் திருமணம் செய்த சுபாஷினி அலி, ஒரு பொதுவுடைமை பெண்கள் ஆர்வலரும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பெண்கள் பிரிவான அனைத்திந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் தலைவராக இருந்தார். சுபாஷினி அலியின் கருத்துப்படி, பிரேம் சாகல் ஒரு நாத்திகர், பொதுவுடைமை சித்தாந்தத்த்தை தீவிரமாக நம்பினார்.[10] சாகல் 1958 திசம்பர் 20, அன்று, கான்பூரில் உள்ள ஆலன் கஞ்சில் ஷீலிங் ஹவுஸ் பள்ளிக்கு அடித்தளம் அமைத்தார். இது கான்பூரில் ஒரு பிரபலமான பள்ளியாக மாறியது . மேலும், உத்தரபிரதேசத்தின் சிறந்த பள்ளிகளில் ஒன்றாக இடம்பிடித்தது. மேற்கோள்கள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia