நாடு கடந்த இந்திய அரசு
விடுபட்ட இந்தியாவின் இடைக்கால அரசு (Hindi: आर्ज़ी हुक़ूमत-ए-आज़ाद हिन्द, Urdu: عارضی حکومتِ آزاد ہند, அல்லது ஆசாத் இந்த் அரசு), சுருங்க விடுதலையான இந்தியா[1][2] அல்லது ஆசாத் இந்த், 1943ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நிறுவப்பட்ட தற்காலிக நாடு கடந்த அரசாங்கம் ஆகும். இரண்டாம் உலகப் போரில் பிரித்தானியப் படைக்கு எதிரான நாடுகளை குறிப்பாக ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் ஆதரவுடன் இந்தியச் சுதந்திரத்தை அடைய விரும்பிய சுபாஷ் சந்திர போஸ் அந்நாடுகளிடம் உதவி கேட்டார். ஜெர்மனி, இத்தாலியின் உதவி கிடைக்காது போகவே, ஜப்பான் செல்ல முடிவு செய்து, போர் காலத்தில் நீர் மூழ்கி கப்பல் மூலம் ஜப்பான் சென்று ராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். பிரித்தானிய அரசுக்கு எதிராக உருவாகி செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை மீள் உருவாக்கம் செய்து அதன் தலைவரானார் சுபாஷ். சுதந்திரத்திற்கு போராடி நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி பயிற்சி அளிக்கப்பட்டது. 1943 அக்டோபர் 21 இல் சிங்கப்பூரில் போஸ், ”ஆசாத் இந்த்” என்ற சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29 ந் தேதி அரசின் தலைவராக தேசிய கொடியை ஏற்றினார். அவற்றை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன. பிரதமர் பதவியையும், பிரதம படைத்தளபதி பொறுப்பையும் போஸ் ஏற்றார். பெண்கள் படையின் தளபதியாக தமிழ்ப் பெண்ணான மேஜர் லட்சுமி சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். சுதந்திர அரசாங்கம் அமைக்கப்பட்ட 2 நாட்களில், பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான போர்ப்பிரகடனத்தை நேதாஜி வெளியிட்டார்.அரசாங்கத்தையும், ராணுவத்தையும் குறுகிய காலத்தில் வலுப்படுத்தினார். தேசிய அரசாங்கம் போரை நடத்தியதுடன் நில்லாது, பல பள்ளிக்கூடங்களைத் திறந்தது; புதிய நாணயங்களை வெளியிட்டது. பத்திரிகைகளையும் நடத்தியது. சுதந்திர அரசாங்கத்தின் தலைமையகம், முதலில் சிங்கப்பூரில் இருந்து பிறகு ரங்கூனுக்கு மாறியது. இந்த அரசாங்கத்தின் கிளை அலுவலகங்கள், பல்வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அமைக்கப்பட்டன. நேதாஜியின் சுதந்திர அரசுக்கு ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து முதலிய நாடுகள் அங்கீகாரம் அளித்தன. சுதந்திர அரசுக்கென தனியாக இரண்டு வாரங்களில் “ஆசாத் ஹிந்த் பாங்க்” தொடங்கப்பட்டது.[3] மேலும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia