பி. சி. அலெக்சாண்டர்
முனைவர். படிஞ்ஞாரெதலக்கல் செரியன் அலெக்சாண்டர் (Padinjarethalakal Cherian Alexander, மார்ச்சு 20, 1921 - ஆகத்து 10, 2011) ஓர் முன்னாள் இந்தியக் குடியுரிமை பணியாளரும் பின்பு அரசியல்வாதியாக விளங்கியவருமாவார். இந்திய ஆளுநராக தமிழகத்தில் 1988 முதல் 1990 வரையும் மகாராட்டிரத்தில் 1993 முதல் 2002 வரையும் பணியாற்றி யுள்ளார். மகாராட்டிர ஆளுநராகப் பணியாற்றியக் காலத்தில் கோவாவின் ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக 1996 முதல் 1998 வரை மேற்பார்த்துள்ளார். 29 சூலை 2002 முதல் 2 ஏப்ரல் 2008 வரை மகாராட்டிர மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டுள்ளார்.[1] அவரது குடியுரிமைப்பணிக் காலத்தில் வணிகத்துறை அமைச்சகத்திலும் பல ஐக்கிய நாடுகள் செயலகத்திலும் சிறப்புற பணியாற்றியுள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் முதன்மை செயலராக பணியாற்றிய காலமும் குறிப்பிடத்தக்கது. தனிவாழ்வுஅவரது சொந்த ஊர் கேரள மாநிலம் மாவேலிக்கரா ஆகும். தனது ஓய்விற்குப் பின்பு சென்னை கோட்டூர்புரம் அருணாச்சலம் தெருவில் வசித்திருந்தார். 5 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு முகப்பேரில் உள்ள மதராஸ் மெடிகல் மிசன் மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்தார். நோய் தீவிரமடைந்ததை அடுத்து சிகிட்சை பலனின்றி ஆகத்து 10, 2011 அன்று காலையில் மரணமடைந்தார். அவருக்கு அக்கம்மா என்ற மனைவியும், ஜவஹர் அலெக்சாண்டர், அசோக் அலெக்சாண்டர் என்ற மகன்களும், குமாரி, ரஜினி ஆகிய மகள்களும் உள்ளனர்.[2] எழுத்துக்கள்பல ஆய்வுக் கட்டுரைகளை பதிப்பித்துள்ள அலெக்ஸாண்டர் கீழ்வரும் ஆங்கில நூல்களை வெளியிட்டுள்ளார்:
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia