கோட்டூர்புரம்

கோட்டூர்புரம்
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகாடே, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
அண்ணா நூற்றாண்டு நூலகம்

கோட்டூர்புரம் சென்னையின் அடையார் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஓர் நகர்ப்பகுதி. ஆற்றின் வடக்கு நோக்கிய வளைவில் அமைந்துள்ளதால் செய்மதி படங்களில் எளிதாக அடையாளம் காணலாம். சென்னையின் பிற பகுதிகளுடன் எளிதாக இணைக்கப்படாது இருந்தமையால் 60,70களில் மிக அமைதியான குடியிருப்புப் பகுதியாக இருந்தது. கோட்டூர்புரப் பாலம் அமைக்கப்பட்டு சாமியர்சு சாலையுடன் இணைக்கப்பட்டபின் வேகமான வளர்ச்சி ஏற்பட்டது. சிறப்பு கல்வி நிறுவனங்களான இ.தொ.க,அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றை அண்மையில் கொண்டிருக்கும் இப்பகுதியில் புதிய தலைமுறை தொழிற்நுட்பங்களை கையாளும் மிகப் பெரும் நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ளது. முழுமையும் கணினிமயமாக்கப்பட்ட பிர்லா கோளரங்கம் இங்கு அமைந்துள்ளது.

கோட்டூர்புரம் பறக்கும் தொடருந்து நிலையம்

முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் இங்கு வாழ்ந்து வந்தார். செட்டிநாட்டரசர் மற்றும் ஸ்பிக் நிறுவன தலைவர் ஏ. சி. முத்தையாவின் மாளிகை இங்குள்ளது. இவரது மாளிகையை அடுத்த வளாகத்தில் அபிராமி-சிவகாமி கல்யாண மண்டபமும் எம்ஏசி ஸ்பின் துடுப்பாட்ட மையமும் அமைந்துள்ளன. இப்பகுதி முன்பு அமைதியான குடிப்பகுதி என்பதால் பல புகழ்பெற்ற கலைஞர்கள் இங்கு வாழ்ந்தனர். முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் வீடு இங்கு உள்ளது.

மிகத்தொன்மையான கோவில்கள்,பெருமாள் கோவில் (1000 ஆண்டுகள் பழையது), பொன்னியம்மன் கோவில் (400 ஆண்டுகள் பழையது) அண்மையில் உள்ள கோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ளன. கோட்டூர்புரம் அடையாறு ஆற்றின் கரையோரம் அமைந்திருப்பதால் மழைக்காலங்களில் மிகவும் பாதிக்கப்படும் பகுதியாக உள்ளது. 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி பெய்த கனமழையில் பெரிதும் பாதிக்கப்பட்டது.[4]

அமைவிடம்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. வெள்ளக் காட்டிலிருந்து சகதிக் காட்டுக்கு - சென்னை கோட்டூர்புரம்[தொடர்பிழந்த இணைப்பு]



Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya