கோவா ஆளுநர்களின் பட்டியல், கோவா ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் பனஜியில் உள்ள ராஜ்பவன் (கோவா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது கோவாவின் ஆளுநராக பி. எஸ். சிறீதரன் பிள்ளை உள்ளார்.
கோவா 30 ஜூலை, 1987-க்கு முன்புவரை இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப்பகுதியாக இருந்து வந்தது. அதன் பின் மாநிலமாக மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாரவரம்பு மற்றும் செயற்பாடுகள்
ஆளுநரின் அதிகாரங்கள் பல வகைகளில் மாநிலங்களில் செயல்படுத்தப்படுகின்றன.
செயலாட்சி அதிகராங்கள் நிருவாகம், நியமனம் மற்றும் நீக்கல் அதிகாரங்கள்,
சட்டமன்ற அதிகாரங்கள் மாநிலங்களின் சட்டமன்றம் மூலம் சட்டங்களை உருவாக்குதல். (சட்டமன்ற மேலவை மற்றும் சட்டமன்ற கீழவை)
வரையறைக்குட்பட்ட அதிகாரங்கள் ஆளுநரின் அதிகார வரம்பிற்குள் (அ) வரையறைக்குட்படுத்தப்பட்ட அதிகாரங்களின்படி செயல்படும் அதிகாரங்கள்.
அலுவல்நிலை அதிகாரங்கள்
ஆளுநர் அம்மாநில பல்கலைக்கழக வேந்தராக அவரின் அலுவல்நிலை அதிகாரங்களின்படியும், கோவா பல்கலைக்கழக சட்டம், 1984 இன்படியும் அப்பொருப்பை வகிக்கின்றார்.
ஆளுநர் அலுவல்நிலை அதிகாரத்தின்படி (ex-officio-எக்ஸ் அபிசியோ) இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் கோவா மாநிலக் கிளைத் தலைவராக பொறுப்பு வகிக்கின்றார். கோவா மாநில செஞ்சிலுவைச் சங்கத்தின் கூட்டத் தலைவர் (chairman-சேர்மேன்) மற்றும் சிறப்புச் செயலாளர்கள (Hon. Secretary-ஆனரரி செக்ரட்டரி) ஆளுநரால் தேர்ந்தெடுத்து நியமனம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு.
ஆளுநர் கோவா மாநில சுற்றுச் சூழல் பாதுகாப்புக் குழுவின் ஆலோசனைக் குழுத்தலைவராக செயல்படுகின்றார். இக்குழுவில் அரசு செயலர்கள் மற்றும் அரசு சாரா அலுவலர்கள் இடம்பெற்று ஆறு மாதத்திற்கொருமுறை இக்குழுக் கூட்டபெற்று கோவா மாநிலத்தின் சுற்றுச்சூழல், சூழிலியல் இவைகளை ஆராய்ந்து முடிவெடுக்கின்றது.
ஆளுநர் ஒய்வுபெற்ற இராணுத்தினர், மற்றும் விதவைகளுக்கான மறுவாழ்வு நிதியத்தின் கூட்டத் தலைவராக செயல்படுகின்றார்.
கோவா முன்னாள் ஆளுநர்களின் பட்டியல்
போர்ச்சுகீசியத் தலைமை ஆளுநர்கள்
முதல் போர்ச்சுகீசியத் தலைமை ஆளுநராக (கவர்னர் ஜெனரல்) 1505 ஆம் ஆண்டு பிரான்சிஸ்கோ டி அல்மீதா வும் கடைசித் தலைமை ஆளுநராக மனுவல் அன்டோனியோ ஒசலோ இ சில்வா 1961 வரை பொறுப்ப வகித்தனர். கோவாவில் மொத்தம் 163 தலைமை ஆளுநர்கள் பொறுப்பு வகித்துள்ளனர். மொத்தப்பட்டியலைக் காண இத்தளத்தை தொடர்பு கொள்ளவும்; ராஜ்பவன் கோவா அரசு இணையம்பரணிடப்பட்டது 2005-02-09 at the வந்தவழி இயந்திரம்.
துணைநிலை ஆளுநர்கள்
கோவா, தாமன் டையூவுடன் இணைந்து இந்தியாவின் ஆட்சிப்பகுதியாக 30 மே, 1987 வரை செயல்பட்டது. அதுவரை அப்பகுதியை துணைநிலை ஆளுநர்களே கோவாவின் அட்சி பொறுப்பை ஏற்றிருந்தனர்.[1]
கோவாவின் முன்னாள் துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்
வ.எண்
துணைநிலை ஆளுநர் பெயர்
பதவி ஆரம்பம்
பதவி முடிவு
1
கே. பி. கேன்டித் (இராணுவ ஆளுநர்)
19 டிசம்பர் 1961
6 சூன் 1962
2
டி. சிவசங்கர்
7 சூன் 1962
1 செப்டம்பர் 1963
3
எம். ஆர். சச்தேவ்
2 செப்டம்பர் 1963
8 டிசம்பர் 1964
4
ஹரி சர்மா
12 டிசம்பர் 1964
23 பெப்ரவரி 1965
5
கே. ஆர். டம்லே
24 பெப்ரவரி 1965
17 ஏப்ரல் 1967
6
நகுல் சென்
18 ஏப்ரல் 1967
15 நவம்பர் 1972
7
எஸ். கே. பானர்ஜி
16 நவம்பர் 1972
15 நவம்பர் 1977
8
பி. எஸ். கில்
16 நவம்பர் 1977
30 மார்ச் 1981
9
ஜக்மோகன்
31 மார்ச் 1981
29 ஆகத்து 1982
10
ஐ. எச். லத்திப்
30 ஆகத்து 1982
23 பெப்ரவரி 1983
11
கே. டி. சத்தரவாலா
24 பெப்ரவரி 1983
3 சூலை 1984
12
ஐ. எச். லத்திப்
4 சூலை 1984
23 செப்டம்பர் 1984
13
கோபால் சிங்
24 செப்டம்பர் 1984
29 மே 1987
1987-க்குப்பின் பொறுப்பேற்ற ஆளுநர்கள்
கோவா 1987 முதல் ஆட்சிப்பகுதியிலுருந்து மாநிலமாக அறிவிக்கப்பட்டது அதுமுதல் பொறுப்பேற்ற மாநில ஆளுநர்கள்;
கோவாவின் (1987க்குப்பின்) முன்னாள் மாநில ஆளுநர்களின் பட்டியல்