பெங்கோ திறப்பு
சதுரங்க விளையாட்டில் பெங்கோ திறப்பு ( Benko's Opening ) என்ற சதுரங்கத் திறப்பு அங்கேரியன் திறப்பு என்றும் அரசரின் விலாமடிப்புத் திறப்பு என்றும் பலவாறாக அழைக்கப்படுகிறது. இத்திறப்பாட்டம், 1. g3 என்ற அடையாள நகர்வுடன் ஆரம்பமாகிறது. வெள்ளை ஆட்டக்காரரின் 1.g3 நகர்வு மிகவும் பிரபலமான முதல் நகர்வு நடவடிக்கை ஆகும்; சாத்தியமான இருபது துவக்க நகர்வுகளில் இந்நகர்வின் செல்வாக்கு ஐந்தாம் இடத்தைப் பெற்றுள்ளது. வெள்ளை ஆட்டக்காரரின் இதற்கு அடுத்த நகர்வு பொதுவாக 2.Bg2 எனத் தொடர்ந்து விலா மடிப்புத்தேர் உருவாக்கி விளையாடும் நோக்கம் கொண்டதாகும். இவ்வாறான திறப்பாட்டம் கேட்டலான் திறப்பு அல்லது அரசரின் இந்தியத் தாக்குதல் வகைத் திறப்பு அல்லது ஆங்கிலத் திறப்பின் சில வகைகள் என்று நிலை மாறிவிட வாய்ப்பு உண்டு. வெள்ளை ஆட்டக்காரரின் 1. g3 என்ற நகர்வு 1...e5 2.Bg2 d5 3.Nf3 -- 4.0-0 என்ற வரிசை முறையில் விளையாட்டைத் தொடர வழிகோலுகிறது. இவ்வாறு விளையாடினால் வெள்ளையின் ஆட்டத்தில் முன்னேற்றமும் அவருடைய அரசருக்குப் பாதுகாப்பும் கிடைக்கிறது. அதேவேளையில் கருப்பு ஆட்டக்காரரின் d- மற்றும் e சிப்பாய்கள் சதுரங்கப் பலகையின் மையப்பகுதிக்குள் வந்துவிடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திறப்பு பால் பெங்கோ என்பவரால் முதன் முதலில் விளையாடப்பட்டதைத் தொடர்ந்து அவருடைய பெயராலேயே அழைக்கப்படுகிறது. இவர் 1. g3 என்ற நகர்வுடன் விளையாட்டை ஆரம்பித்து விளையாடியே, 1962 ஆம் ஆண்டில் குராக்கேவோவில் நடைபெற்ற பரிந்துரைக்கப்பட்ட போட்டியாளர்கள் போட்டியில் பாபி பிசர் மற்றும் மைக்கேல் தால் இருவரையும் தோற்கடித்தார். 1963 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக சதுரங்கச் சாம்பியன் பட்டப் போட்டியின் சுற்று ஆட்டங்களில் பெங்கோ 11 ஆட்டங்களில் இத்திறப்பிலேயே விளையாடினார்[1] [2] பொதுவாக எல்லோராலும் ஆடப்படும் மற்ற திறப்புகளைப் போல இது கருதப்பட்டாலும், இத்திறப்பு சதுரங்க முன்நகர்வுகளுக்கான கலைக் களஞ்சியத்தில் A00 என்ற குறியீடு வழங்கப்பட்டு வகைப்படுத்தப் பட்டுள்ளது[3]. இத்திறப்புடன் ஆரம்பமாகும் பெரும்பாலான ஆட்டங்கள் ஆட்டப்போக்கில் மற்ற குறியீடுகளைக் கொண்ட திறப்பாட்டங்களாக மாற்றம் பெற்றுவிடுகின்றன.
கருப்பின் பதில் நகர்வுகள்1...d5ஒருவேளை கருப்பு மிகப்பொதுவான நகர்வான 1...d5. என்று விளையாடினால்,
1...g6
1. g3 g6 2. Bg2 Bg7
வெள்ளையின் 1. g3 நகர்வுக்கு சமச்சீராக கருப்பும் 1...g6 என்று விளையாடினால்,
1...Nf6கருப்பின் இந்த நகர்வு வலிமையற்றது. வெள்ளை ஆட்டக்காரர் இந்த நகர்வை தனக்கு விருப்பமான திறப்பாட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளமுடியும்.
1...e5கருப்பின் இந்த நகர்த்தல் வீரியம் மிக்க நகர்வு ஆகும். இதனால் வெள்ளை தன்னுடைய அமைச்சரை உடனடியாக நகர்த்தும் எண்ணத்தை தள்ளி வைக்கிறது.
குறிப்புகள்
மேற்கோள்கள்![]() The Wikibook Chess Opening Theory மேலதிக விவரங்களுள்ளன: Benko's Opening
இவற்றையும் காண்க
|
Portal di Ensiklopedia Dunia