சபாக் பெர்ணம் மாவட்டம்
சபாக் பெர்ணம் மாவட்டம் (மலாய்: Daerah Sabak Bernam; ஆங்கிலம்: Sabak Bernam District; சீனம்: 沙白安南县) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு வடக்கில் பேராக் மாநிலம்; கிழக்கில் உலு சிலாங்கூர் மாவட்டம்; தெற்கில் கோலா சிலாங்கூர் மாவட்டம்; மேற்கில் மலாக்கா நீரிணை ஆகியவை உள்ளன. சபாக் பெர்ணம் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்: சபாக்; சுங்கை பெசார்; செகிஞ்சான். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் சபாக் பெர்ணம் நகரம் ஆகும். பொதுசபாக் பெர்ணம் மாவட்டம், சிலாங்கூர் மாநிலத்தின் நெல் விளையும் கேந்திரப் பகுதி. அந்த வகையில் சபாக் பெர்ணம் மாவட்டத்தின் முக்கியப் பொருளாதார நடவடிக்கை விவசாயம். இந்த மாவட்டம் சிலாங்கூரின் அதி மேற்குப் பகுதியில் உள்ள மாவட்டம். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. நிர்வாகப் பகுதிகள்சபாக் பெர்ணம் மாவட்டம், சபாக் பெர்ணம் நகராட்சி மன்றத்தால் நிர்வாகம் செய்யப் படுகிறது. சபாக் பெர்ணம் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்
மலேசிய நாடாளுமன்றம்![]() மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) சபாக் பெர்ணம் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள். 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.[2]
சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றம்சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்.[3]
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்
சபாக் பெர்ணம் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்சபாக் பெர்ணம் மாவட்டத்தில் 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 157 மாணவர்கள் பயில்கிறார்கள். 22 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[4][5]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia