கெத்தாம் தீவு
கெத்தாம் தீவு எனும் நண்டுத் தீவு (மலாய்: Pulau Ketam; ஆங்கிலம்: Ketam Island அல்லது Crab Island; சீனம்: 吉胆岛 பின்யின்: Jídǎn Dǎo; சாவி: ڤولاو كتام ) என்பது மலேசியா, சிலாங்கூர், கிள்ளான் மாவட்டம், கிள்ளான் துறைமுகத்திற்கு அருகில் மலாக்கா நீரிணை கடல்பகுதியில் அமைந்து உள்ள ஒரு தீவு. இங்கு சீனர்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.[3] இந்தத் தீவு கடல் மட்டத்திற்கும் கீழே இருப்பதால் கடல் பெருக்குகளை (Intertidal Zone) எதிர்நோக்கும் பகுதியாகும். கடல் பெருக்குகளினால் இங்கு சதுப்புநில கண்டல் தாவரங்கள் மிகுதியாகக் காணப் படுகின்றன. இங்குள்ள வீடுகள் எல்லாமே மிதவை வீடுகளாக உள்ளன. சில வீடுகள் கடல் மட்டத்தில் இருந்து 10 மீட்டர் உயரத்திலும் கட்டப்பட்டு உள்ளன.[4] பொது1880-ஆம் ஆண்டில், இந்தத் தீவில் மக்கள் குடியேறத் தொடங்கினார்கள். அந்த ஆண்டில் இரண்டு சீன மீன்பிடி கிராமங்கள் நிறுவப்பட்டன. தீவின் தெற்குப் பகுதியில் உள்ள முக்கியமான கிராமம் புலாவ் கெத்தாம் (Pulau Ketam). வடகிழக்கு பகுதியில் மற்றொரு கிராமம் உள்ளது. சுங்கை லீமா கிராமம் (மலாய்:Sungai Lima; ஆங்கிலம்: Fifth River; சீனம்: 五条港) என்று அழைக்கப்படுகிறது உள்ளூர்வாசிகளில் சீனர் இனத்தைச் சேர்ந்த தியோசிவ் (Teochew) மற்றும் ஆக்கியன் (Hokkien) முக்கியமான இனக்குழுவினர் ஆகும். இவர்களின் பேச்சுவழக்கு மொழி மாண்டரின் சீன மொழி (Mandarin Chinese).[5] கண்டல் மரக்காட்டு சதுப்புநிலங்கள்இரண்டாவது கிராமமான சுங்கை லீமா கிராமத்தில் அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்ட ஒரு சிறிய மலேசியப் பழங்குடியினர் சமூகம் உள்ளது. தீவின் மற்ற பகுதிகள் கண்டல் மரக்காடுகளின் (Mangrove Swamps) சதுப்புநிலங்களைக் கொண்டுள்ளது. அதிகக் கடல் பெருக்குகள் ஏற்படும் போது இந்தத் தீவு கடலுக்குள் மூழ்குவதால் வீடுகள் உயரமாக கட்டப்பட்டு உள்ளன. நடைபாதைகள் பைஞ்சுதையால் அமைக்கப்பட்டு குறுகலாக உள்ளன. வீடு வீடாகச் செல்லும் பாதைக்கு மரப்பாலம் ஒன்றும் அமைக்கப்பட்டு இருக்கும். தினசரி படகுச் சேவைநண்டு தீவில் சிற்றுந்துகள் இல்லை. ஆனால் இந்தத் தீவில் உள்ள மக்கள் பெரும்பாலும் மிதிவண்டி அல்லது விசையுந்துகளைப் பயன்படுத்துகின்றனர். தீவின் இரண்டு கிராமங்களையும் இணைக்கும் சிறப்பு வழித்தடமும் இல்லை. எனவே, கிராம மக்கள் படகுகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்தத் தீவுக்குச் செல்ல விரும்புவோர், கிள்ளான் துறைமுகம் வழியாக, கெத்தாம் தீவு மற்றும் சுங்கை லீமாவை இணைக்கும் தினசரி படகுச் சேவையைப் பயன்படுத்தலாம்.[6] கடல் உணவு உணவகங்கள்சிலாங்கூரில் உள்ள சுற்றுலாத் தலங்களில் கெத்தாம் தீவும் ஒன்றாகும். இங்கு பல்வேறு கடல் உணவுகளை வழங்கும் உணவகங்கள் உள்ளன. குடியிருப்பாளர்களும் புதிய கடல் உணவுகளை விற்பனை செய்கின்றனர். அத்துடன் சுற்றுலாப் பயணிகள் முழு தீவையும் சுற்றிப் பார்க்க விரும்பினால் மிதிவண்டிளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். இந்த தீவு பெயின்ட் மை லவ் (2015) (Paint My Love) என்ற மலேசியத் திரைப்படத்தின் படப்பிடிப்புக்குப் பயன்படுத்தப்பட்டது. காட்சியகம்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia