கிள்ளான்
கிள்ளான், (மலாய்: Klang; ஆங்கிலம்: Klang அல்லது Kelang; சீனம்: 巴生); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கிள்ளான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். சா ஆலாம் பெருநகரம், சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக மாறுவதற்கு முன்னர், கிள்ளான் நகரம் சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாகத் திகழ்ந்து உள்ளது. இருப்பினும் வரலாறு சிறப்புமிக்க இந்த நகரம், இன்றும் சிலாங்கூர் மாநிலத்தின் அரச நகரமாக விளங்கி வருகிறது. கிள்ளான் எனும் பெயரில் கிள்ளான் மாவட்டமும் பெயர் கொண்டு உள்ளது. கிள்ளான் நகரம், கோலாலம்பூரில் இருந்து 32 கி.மீ மேற்கில் அமைந்து உள்ளது. வரலாறு
கிள்ளான் அரச நகரமானது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே மனிதர்கள் வசிக்கும் இடமாக இருந்து வருகிறது. வெண்கலக் காலத்தின் தொட்டிகள், கோடாரிகள் மற்றும் பிற கலைப் பொருட்கள்; கிள்ளான் நகரின் அருகாமையிலும், கிள்ளான் நகரத்தின் உட்பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. வெண்கலக் காலத்துப் பொருட்கள்கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு வெண்கல மணி கிள்ளான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது.[3][4][5] துலாங் மாவாஸ் என்று அழைக்கப்படும் (குரங்கு எலும்புகள்); மற்றும் இரும்புக் கருவிகள்; ஒரு வெண்கல தொட்டி ஆகியவை கிள்ளான் பகுதியிலும்; அதற்கு அருகில் உள்ள இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.[6][7] ஈய வளங்கள் நிறைந்த கிள்ளான்; கிள்ளான் பள்ளத்தாக்கு; ஆகிய இடங்கள் சிலாங்கூர் வரலாற்றிலும், மலாயா வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 11-ஆம் நூற்றாண்டிலேயே மலாயாவின் பிற மாநிலங்கள் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சார்ந்து இருந்தவையாகக் குறிப்பிடப் படுகின்றது.[8] நகரகிரேதாகமம் இலக்கியப் படைப்பில் கிள்ளான்14-ஆம் நூற்றாண்டின் மஜபாகித் பேரரசின் நகரகிரேதாகமம் எனும் இலக்கியப் படைப்பிலும் கிள்ளான் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் 1409 முதல் 1433 வரை மலாக்காவிற்குப் பயணம் செய்த சீனக் கடல் படைத் தளபதி செங் கோவின் தொடக்கக் கால கடல்சார் வரைபடங்களில் கிள்ளான் ஆறு குறிக்கப்பட்டு பெயரிடப்பட்டும் உள்ளது. 15-ஆம் நூற்றாண்டில் மலாக்கா சுல்தானகத்தின் கட்டுப்பாட்டில் கிள்ளான் இருந்தது. மலாக்காவின் வரலாற்றுத் தலைவர் என்று கொண்டாடப்படுபவர் துன் பேராக். இவர் கிள்ளான் நகரத்தில் இருந்து தான் மலாக்காவிற்குச் சென்று மலாக்காவின் மூத்த அமைச்சரனார். 17-ஆம் நூற்றாண்டில், சிலாங்கூர் கடலோரப் பகுதிகளில், இந்தோனேசியாவில் இருந்து பூகிஸ் மக்கள் குடியேறத் தொடங்கினர். சிலாங்கூர் சுல்தானகம் 1766-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.[9][10] பிரபலமான இடங்கள்கிள்ளானில் சுற்றுலா ஈர்ப்பு இடங்கள் என்றால் “ஆலாம் சா” மாளிகை, “சுல்தான் சுலைமான்” பள்ளிவாசல், தெங்கு சாலை லிட்டில் இந்தியா, கேரித் தீவு மற்றும் ஸ்ரீ சுந்தராஜா பெருமாள் ஆலயம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். சுல்தான் அப்துல் அஜீஸ்
1909 இல் கட்டப்பட்ட நேர்த்தியான சுல்தான் சுலைமான் கட்டிடத்தில் ராயல் கேலரி உள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia