போகோ - இந்தியத் தற்காப்பு
சதுரங்க ஆட்டத்தில் போகோ-இந்தியத் தற்காப்பு ( Bogo-Indian Defence) என்ற திறப்பாட்டம் பின்வரும் அடையாள நகர்வுகளைக் கொண்டு ஆரம்பமாகிறது. 1.d4 Nf6 2.c4 e6 நகர்வுகளுக்குப் பின்னர் தோன்றும் இருப்புநிலை பொதுவானது. இந்நிலையில் வெள்ளை ஆட்டக்காரர் மூன்றாவது நகர்வை 3.Nc3 என்று ஆடுவதுதான் வழக்கம். இதைத் தொடர்ந்து 4.e4. என்று நகர்த்தி மையப்பகுதியில் ஒரு பெரிய சிப்பாய் மையத்தை அமைத்துக் கொள்ளப் போவதாக கருப்பை அச்சுறுத்த முடியும். வெள்ளை 3.Nc3 ஆடினால் கருப்பு 3...Bb4 விளையாடும். இதனால் ஆட்டம் நிம்சோ இந்தியத் தடுப்பாட்டத்திற்குள் செல்லும். இதைத் தவிர்க்கவே வெள்ளை ஆட்டக்காரர்கள் பெரும்பாலும் 3.Nf3 விளையாடுகின்றனர். கருப்பு 3.Nf3 நகர்வுக்குப் பின்னர் 3...b6 என்று இராணியின் இந்தியத் தற்காப்பு ஆடுவது கருப்பின் வழக்கம் அல்லது 3...d5 என்று இராணியின் பலியாட்ட நிராகரிப்பு ஆட்டத்தை தேர்ந்தெடுப்பர். இவை இரண்டுமில்லாமல் 3...Bb4+ என்று நகர்த்துவது போகோ-இந்தியத் தற்காப்பு திறப்பு எனப்படுகிறது. இந்நகர்வை கண்டறிந்த எபிம் போகோல்சுபோவ் பெயரை நினைவுகூறும் வகையில் இத்திறப்பு போகோ- இந்தியத் தற்காப்பு எனப்படுகிறது. இராணியின் இந்தியத் தற்காப்பு திறப்பு போல இது அவ்வளவு பிரசித்தமானது அல்ல என்றாலும் போகோ-இந்தியத் தற்காப்பும் அவ்வப்போது அனைத்து நிலைகளிலும் ஆடப்பட்டு வருகிறது. சதுரங்கத் திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் இத்திறப்பிற்கு E11 என்ற குறியீட்டை வழங்கியுள்ளது. வகைகள்கருப்பு ஆட்டக்காரரின் 3...Bb4+ என்ற நகர்வுக்கு எதிராக 4.Nc3 விளையாடினால் அது நிம்சோ-இந்தியன் காஸ்பரோவ் வகை ஆட்டமாக தொடரும். எனவே வெள்ளை நகர்த்த தனித்துவமாக இருப்பது 4.Bd2 அல்லது 4.Nbd2 நகர்வுகள் மட்டுமேயாகும். 4.Bd2கருப்பு ஆட்டக்காரரின் 3...Bb4+ என்ற நகர்வுக்கு எதிராக 4.Bd2 என்று விளையாடுவது வழக்கமான செயலாகும். இந்த நகர்வால் b4 கட்டத்தில் நிற்கும் அமைச்சருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தன்னுடைய அமைச்சரை என்ன செய்வதென்று முடிவு எடுத்தே ஆகவேண்டிய நிலையில் தற்போது கருப்பு உள்ளார்.
4.Nbd2கருப்பு ஆட்டக்காரரின் 3...Bb4+ என்ற நகர்வுக்கு எதிராக வெள்ளை 4.Nbd2 என்று விளையாடவும் ஒரு வாய்ப்பு உள்ளது. d2 சதுரத்தில் நின்றுள்ள குதிரை கருப்பு அமைச்சரின் முற்றுகையை தடுப்பதோடு இருப்பிடத்தைவிட்டு வெளியேயும் வந்துவிடுகிறது. 4...b6, 4...0-0, மற்றும் 4...d5 என்று அடுத்த நகர்வுக்கு கருப்புக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. மொன்றிசெல்லிப் பொறிபோகோ-இந்தியத் தற்காப்பு திறப்பிலிருந்துதான் மொன்றிசெல்லிப் பொறி திட்டமிடப்படுகிறது.
மேற்கோள்கள்
இவற்றையும் காண்க
![]() The Wikibook Chess Opening Theory மேலதிக விவரங்களுள்ளன: Bogo-Indian Defence
|
Portal di Ensiklopedia Dunia