மகாநாமன்

மகாநாமன் (பொ.பி. 410 -432) என்பவன் இலங்கையை ஆண்ட முதலாம் லம்பகர்ண அரசர்களுள் இருபத்து மூன்றாவது அரசன். இவனது அண்ணனான உபதிச்சன் என்பவனின் மனைவி இவன் மேல் கொண்ட கூடாவொழுக்க ஆசையால் உபதிச்சனைக்கொன்று இவனை அரசனாக்கினாள். இவனுக்கு இன்னொரு மனைவி உண்டு. அவள் தமிழ் குலத்தைச் சேர்ந்தவள் என்பதால் தமிழ மகிசி எனப்பட்டாள். இவர்களுக்கு கொத்திசேனன் என்ற மகனிருந்தான். மகாநாமன் 22 ஆண்டுகள் அரசாண்டான்.[1]

மேற்கோள்கள்

  1. சூல வம்சம், 37ஆம் பரிச்சேதம், 202-247

மூலநூல்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya